சொல் பொருள்
(வி) 1. மெல்லு, 2. மிதித்து அழி,
சொல் பொருள் விளக்கம்
1. மெல்லு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
masticate, trample
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கொடும் கால் மா மலர் கொய்துகொண்டு அவண பஞ்சாய் கோரை பல்லின் சவட்டி புணர் நார் பெய்த புனைவு இன் கண்ணி – பெரும் 216-218 வளைந்த காம்பினையுடைய கரிய பூவைப் பறித்துக்கொண்டு, அங்கு உண்டாகிய பஞ்சாய்க் கோரையைப் பல்லால் சிதைத்து(க் கிழித்து) முடிந்த நாரால் கட்டிய உருவாக்கம் இனிதான மாலையை வம்ப வடுகர் பைம் தலை சவட்டி கொன்ற யானை கோட்டின் தோன்றும் – அகம் 375/14,15 புதிய வடுகரின் பசிய தலையை மிதித்து அழித்துக் கொன்ற யானைகளின் கொம்பு போலத் தோன்றும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்