Skip to content

சொல் பொருள்

(வி) 1. தாழ்ந்திரு, கவிழ்ந்திரு, 2. வளை, 3. மெலிந்துபோ, 4. ஊறுபடு, 5. அழி. கெடு, 6. விழச்செய், வீழ்த்து, முறி, 7. தாழ்த்து,கவிழ், 8. தோல்வியடை

(பெ) 1. சிராய், செறும்பு, 2. தண்டான்கோரை, 3. சாயல், மென்மை, வனப்பு, அழகு, 4. நுண்மை

சொல் பொருள் விளக்கம்

1. தாழ்ந்திரு, கவிழ்ந்திரு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

incline, hang down, bend, grow thin, get ruined, destroy, mar, breakoff, fell, tilt, get defeated, splinter, Sedge, loveliness, gracefulness, beauty, fineness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

திறவா கண்ண சாய் செவி குருளை – சிறு 130

திறக்காத கண்ணையுடைய சாய்ந்த செவியினையுடைய குட்டி,

புனல் புணை அன்ன சாய் இறை பணை தோள் – குறு 168/5

நீரில் விடும் தெப்பத்தைப்போல் வளைந்து இறங்கிய பருத்த தோள்களை

வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின் – நெடு 150

கச்சை வலித்துக் கட்டினவாய், வளைந்து மெலிந்த இடையினையும்

நோன் குறட்டு அன்ன ஊன் சாய் மார்பின்
உயர்ந்த உதவி ஊக்கலர் தம்மின் – மது 742,743

வலிய வண்டிச்சக்கர உருளையை ஒத்த ஊன் கெட்ட மார்போடே
உயர்ந்த உதவியை மேலும் முயலுதல் உடையாரைக் கொணர்மின்;

மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன் – கலி 134/1

மல்லர்களின் வீரத்தை அழித்துக் கெடுத்த, மலராலான குளிர்ந்த மாலையை அணிந்த மார்பினனாகிய திருமால்

மென் பிணி வன் தொடர் பேணாது காழ் சாய்த்து
கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் – மது 382,383

மெல்லிய பிணிப்பையுடைய வலிய சங்கிலிகளைப் பொருட்டாக எண்ணாமல், அவை கட்டின தறியை முறித்து,
கம்பத்தை விட்டுச் சுழலும் கடாத்தையுடைய யானையும்;

பணிலம் கலி அவிந்து அடங்க காழ் சாய்த்து
நொடை நவில் நெடும் கடை அடைத்து – மது 621,622

சங்குகள் ஆரவாரம் ஒழிந்து அடங்கிக் கிடக்க, சட்டக்காலைத் தாழ்த்திப்
பண்டங்களுக்கு விலைகூறும் நெடிய கடையை அடைத்து,

இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய
பொருது அவரை செரு வென்றும் – மது 55,56

இரண்டு பெரிய (முடியுடைய)வேந்தருடன் குறுநிலமன்னர் பலரும் வீழ 55
பொருது அவரைப் போரில் வென்றும்,

இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம் – திரு 312,313

கரிய பனையின் – (உள்ளே)வெளிற்றினையுடைய – புல்லிய செறும்பை ஒத்த
கரிய நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையுமுடைய கரடி

பைம் சாய் கொன்ற மண் படு மருப்பின்
கார் ஏறு பொருத கண் அகன் செறுவின் – பெரும் 209,210

பசிய கோரையை (அடியில்)குத்தி எடுத்த மண் படிந்த கொம்பினையுடைய
கரிய ஆனேறுகள் பொருத இடமகன்ற வயல்களில்,

துவ்வா நறவின் சாய் இனத்தானே – பதி 60/12

நுகரமுடியாத நறவாகிய நறவு என்னும் ஊரில் உள்ள மென்மையான மகளிர் நடுவே

சாய் அறல் கடுக்கும் தாழ் இரும் கூந்தல் – பதி 74/3

நுண்ணிய கருமணலைப் போன்ற, தாழ்ந்து இறங்கும் கரிய கூந்தலைக் கொண்ட

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *