சொல் பொருள்
(பெ) மலையின் சரிவான பகுதி,
சொல் பொருள் விளக்கம்
மலையின் சரிவான பகுதி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
slope of a hill.
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இங்கே அருவிகள் பாய்ந்து வீழும். பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் – சிறு 90 மூங்கில்கள் நெருங்கி வளர்ந்திருக்கும். கழை வளர் சாரல் களிற்று இனம் நடுங்க – மது 242 குறிஞ்சிப்பூக்கள் கூட்டமாய் வளரும் சாரல் கரும் கோல் குறிஞ்சி – குறு 3/2,3 பலாப்பழங்கள் பழுத்துத்தொங்கும். சாரல் பலவின் கொழும் துணர் நறும் பழம் – ஐங் 214/1 இதனைச் சீர்ப்படுத்திக் குறவர் தினை விதைத்து வளர்ப்பர். தினை விளை சாரல் கிளி கடி பூசல் – மது 291 ஆங்காங்கே குடிசைகள் அமைத்து வாழ்வர் சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரலே – நற் 168/11
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்