Skip to content

சாரல் தூறல்

சொல் பொருள்

சாரல் – நுண்ணிய மழைத்துளி நெருங்க விழுதல்.
தூறல் – பருத்த மழைத்துளி அகலவிழுதல்.

சொல் பொருள் விளக்கம்

சாரல் விழுதல்; தூற்றல் போடுதல் எனவும் வழங்கும். மலைச்சரிவு, சாரல் பெய்தற்கு மிக வாய்ப்பாம். ‘குற்றாலச்சாரல்’ என்பது இதனை விளக்கும். சட்டச்சடவென விழுவது தூறலாம். உமியைப்போல் மெல்லியதாய்ப் பனிநீர் தெளித்தல் போல் இன்பந்தருவதாய் அமைந்தது சாரலாம்.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *