சொல் பொருள்
(வி) 1. பலர் அறியக் கூறு, தெரிவி, அறிவி, 2. நிரப்பு, நிறை
சொல் பொருள் விளக்கம்
1. பலர் அறியக் கூறு, தெரிவி, அறிவி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
declare, announce, proclaim, fill
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சில்_பத_உணவின் கொள்ளை சாற்றி பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி – பெரும் 64,65 உப்பாகிய உணவின் விலையை அறிவித்தவாறு பல எருதுகளையுடைய உப்புவாணிகர் ஊர்களுக்குச் செல்லுகின்ற நெடிய வழி நிவந்து செல் நீத்தம் குளம் கொள சாற்றி களிறு மாய்க்கும் கதிர் கழனி – மது 246,247 ஓங்கிச் செல்லும் வெள்ளம் குளங்கள் கொள்ளும்படி நிறைப்ப, யானையை மறைக்கும் அளவுள்ள கதிர்களைக் கொண்ட வயல்களிலும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்