Skip to content

சொல் பொருள்

1. (வி) யாழ் நரம்பைத் தேய்த்து மெல்லிழையாக்கு, 2. (பெ) பிசிர்

சொல் பொருள் விளக்கம்

யாழ் நரம்பைத் தேய்த்து மெல்லிழையாக்கு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

rub clean and smooth, as a lute string

Small splinter or fibre rising on a smooth surface of wood or metal

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா
குரல் ஓர்த்து தொடுத்த சுகிர் புரி நரம்பின்
அரலை தீர உரீஇ – மலை 22-24

கடுகளவும் இசைச் சுருதியில் தவறு இல்லாது
ஒலிநயத்தைக் கூர்ந்து கேட்டுக்கேட்டுக் கட்டிய தேய்த்து முறுக்கேற்றப்பட்ட நரம்பினில்
கழலைகள் முற்றிலும் அகலுமாறு சிம்பெடுத்து

சிதாஅர் வள்பின் சிதர் புற தடாரி
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி – புறம் 381/12,13

துண்டித்த வார்களால் கட்டப்பட்ட நைந்துபோன புறத்தையுடைய தடாரிப்பறையின்
தோலில் ஒட்டிக்கிடந்து காய்ந்து பொருக்காக இருக்கும் ஊன் பிசிர் சூழஇருக்கும் தெளிந்த முகப்பை அறைந்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *