Skip to content

சொல் பொருள்

(பெ) 1. பூந்தாது, 2. வண்ணப்பொடி

சொல் பொருள் விளக்கம்

1. பூந்தாது

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

pollen dust

saffron mixed powder

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின்
புன் காய் சுண்ணம் புடைத்த மார்பின் – பெரும் 220,221

பொன்னை(உரைத்து)க் காணும் கட்டளைக்கல்லை ஒப்ப, சம்பங்கோரையின்
புல்லிய காயில் தோன்றின தாதை அடித்துக்கொண்ட மார்பினையும்,

சாந்தும் கமழ் தாரும் கோதையும் சுண்ணமும்
கூந்தலும் பித்தையும் சோர்ந்தன – பரி 24/84,85

சந்தனமும்,மணங்கமழும் தாரும், கோதையும், நறுமணப் பொடிகளும்
மகளிர் கூந்தலிடத்திலிருந்து மைந்தர் பித்தையிடத்திலிருந்தும் நழுவி வீழ்ந்தன

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *