சொல் பொருள்
சுரைக்குடுக்கை – ஓயாப் பேசி
சொல் பொருள் விளக்கம்
சுரைக்குடுக்கை என்பது முற்றிக் காய்ந்து போனதாகும். அதனைக் குலுக்கினால் சலசல என ஒலியுண்டாகும். மெல்ல அசைத்தாலும் ஆளசைக்காமல் காற்றால் உருண்டாலும்கூட ஒலிக்கும். அதனால், சளசள என ஓயாமல் பேசுபவனைச் சுரைக் குடுக்கை என்னும் வழக்கு உண்டாயிற்று. ‘வாகை நெற்று’ சலசலப்பதை சங்கப் பாடல் காட்டும் . கிலுகிலுப்பைக்கு உவமையும் படுத்தும், மக்கள் வழக்கோ ஓயாப் பேசியைச் சுரைக்குடுக்கையாகச் சொல்கிறது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்