சொல் பொருள்
(வி) அச்சுறுத்து,
(பெ) 1.கொடுமை, 2. சூரபதுமன், 3. கொடுந்தெய்வம், வருத்தும் தெய்வம், 4. தெய்வமகளிர், 5. அச்சம், 6. கடுப்பு
சொல் பொருள் விளக்கம்
அச்சுறுத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
frighten, terrify, cruelty, A king of Asuras who was slain in battle by Lord Murugan, Malignant deity, Celestial maidens, fear, pungency
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின் கழல் கண் கூகையொடு – திரு 48,49 சுழலும் விழியையுடைய பசிய கண்ணினையும், அச்சுறுத்தும் பார்வையினையும் பிதுங்கிய கண்ணையுடைய கூகையோடு சூர்_அர_மகளிர் ஆடும் சோலை – திரு 41 கொடுமையுடைய தெய்வமகளிர் ஆடும் சோலையையுடைய, சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் – திரு 46 சூரபதுமனாகிய தலைவனைக் கொன்ற ஒளிவிடுகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேல் சூர்_உறு மஞ்ஞையின் நடுங்க – குறி 169 கொடுந்தெய்வம் ஏறின(பேய் பிடித்த) மயிலைப் போல் நடுங்கிநிற்க சூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும் – மலை 239 தெய்வமகளிர் விரும்பும் அடுக்கடுக்காய் அமைந்த சரிவுகளில், தேனடையைக் கண்டாலும் சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்து – ஐங் 71/1 வஞ்சனை நிறைந்தவளும், குறிய வளையல்களை அணிந்தவளும், அஞ்சும்படியான அசைவுகளையுடையவளுமான சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் – பரி 7/62 வண்டுகள் மொய்க்கும் கடுப்புடைய கள்ளினைத் தன் கையில் ஏந்தினாள், நீல நிற நெய்தல் போன்ற கண்களையுடையவள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்