Skip to content

சொல் பொருள்

(வி) அச்சுறுத்து,

(பெ) 1.கொடுமை,  2. சூரபதுமன், 3. கொடுந்தெய்வம், வருத்தும் தெய்வம்,  4. தெய்வமகளிர், 5. அச்சம்,  6. கடுப்பு

சொல் பொருள் விளக்கம்

அச்சுறுத்து,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

frighten, terrify, cruelty, A king of Asuras who was slain in battle by Lord Murugan, Malignant deity, Celestial maidens, fear, pungency

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சுழல் விழி பசும் கண் சூர்த்த நோக்கின்
கழல் கண் கூகையொடு – திரு 48,49

சுழலும் விழியையுடைய பசிய கண்ணினையும், அச்சுறுத்தும் பார்வையினையும்
பிதுங்கிய கண்ணையுடைய கூகையோடு

சூர்_அர_மகளிர் ஆடும் சோலை – திரு 41

கொடுமையுடைய தெய்வமகளிர் ஆடும் சோலையையுடைய,

சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் – திரு 46

சூரபதுமனாகிய தலைவனைக் கொன்ற ஒளிவிடுகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேல்

சூர்_உறு மஞ்ஞையின் நடுங்க – குறி 169

கொடுந்தெய்வம் ஏறின(பேய் பிடித்த) மயிலைப் போல் நடுங்கிநிற்க

சூர் புகல் அடுக்கத்து பிரசம் காணினும் – மலை 239

தெய்வமகளிர் விரும்பும் அடுக்கடுக்காய் அமைந்த சரிவுகளில், தேனடையைக் கண்டாலும்

சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்து – ஐங் 71/1

வஞ்சனை நிறைந்தவளும், குறிய வளையல்களை அணிந்தவளும், அஞ்சும்படியான அசைவுகளையுடையவளுமான

சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் – பரி 7/62

வண்டுகள் மொய்க்கும் கடுப்புடைய கள்ளினைத் தன் கையில் ஏந்தினாள், நீல நிற நெய்தல் போன்ற கண்களையுடையவள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *