Skip to content
செதும்பு

செதும்பு என்பது ஆற்றில் சிறிதளவு ஓடும் நீர்

1. சொல் பொருள்

(பெ) 1. ஆற்றில் சிறிதளவு ஓடும் நீர், 2. சேறு

2. சொல் பொருள் விளக்கம்

ஆற்றில் சிறிதளவு ஓடும் நீர்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Thin current of water, as of rivers in summer, mud, mire

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பொன் உரை மணி அன்ன மாமை கண் பழி உண்டோ
இன் நுரை செதும்பு அரற்றும் செவ்வியுள் நின் சோலை
மின் உகு தளிர் அன்ன மெலிவு வந்து உரைப்பதால் – கலி 48/18

பொன் உரைக்கும் கல்லில் உரைக்கப்பட்ட மணியினைப் போன்ற இவளின் மாநிறத்தின் மேல் தவறு உண்டோ?
மெல்லிய நுரைகளோடு சிறிதாக வழிகின்ற ஓடைநீர் ஒலிசெய்யும் இளவேனிற்பருவத்தில், உன் சோலையில் உள்ள
ஒளி இழந்த தளிரினைப் போல இவள் மேனி தளர்ந்து ஊரார்க்கு இவள் காதலை உரைக்கின்றதே!

பெரும் களிறு மிதித்த அடி_அகத்து இரும் புலி
ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை – அகம் 155/12

பெரிய களிறுகள் மிதித்துச் சென்ற அடிச்சுவட்டில் பெரிய புலிகள்
அடிவைத்து நடந்து சென்ற சேற்று நிலமான ஈரமான வழிகள்,
குற்றமற்ற நாவினையுடைய கூத்தர்கள் தம் முதுகில்

வரையி னருகா மரையா மடப்பிணை
செருத்தற் றீம்பால் செதும்புபடப் பிலிற்றி
வெண்பூ முசுண்டைப் பைங்குழை மேயச் – பெரும்‌; 2ஞ்சைக்‌ 42: 822 2,

செதும்பு
செதும்பு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *