செந்நெல் என்பது ஓர் நெல் வகை
1. சொல் பொருள்
(பெ) ஓர் உயர் ரக நெல் வகை
2. சொல் பொருள் விளக்கம்
ஓர் உயர் ரக நெல் வகை. எட்டு எள்மணிகளை ஒன்றாக அடுக்கினால் என்ன அளவு வருமோ, அதுதான் நெல்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
A kind of superior paddy of yellowish hue
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பழன பாகல் முயிறு மூசு குடம்பை கழனி நாரை உரைத்தலின் செந்நெல் விரவு வெள் அரிசியின் தாஅம் ஊரன் – நற் 180/1-3 வயலருகே இருக்கின்ற பலாமரத்தில் முயிறு எனப்படும் சிவந்த பெரிய எறும்புகள் மொய்த்திருக்கும் கூட்டினை கழனியில் இரைதேடிவந்த நாரை தேய்த்துச் சிதைத்ததால், செந்நெல் கலந்த வெள்ளை அரிசியைப் போல் எறும்புகளும் அவற்றின் முட்டைகளும் பரந்துகிடக்கும் ஊரைச் சேர்ந்தவன் காய் செந்நெல் கதிர் அருந்து - பட் 13 வெண் பூ கரும்பொடு செந்நெல் நீடி - பட் 240 செந்நெல் அம் செறுவின் அன்னம் துஞ்சும் - நற் 73/8 கழனி நாரை உரைத்தலின் செந்நெல்/விரவு வெள் அரிசியின் தாஅம் ஊரன் - நற் 180/2,3 செந்நெல் அரிநர் கூர் வாள் புண் உற - நற் 275/1 கரும் கண் கருனை செந்நெல் வெண் சோறு - நற் 367/3 செந்நெல் வான் பொரி சிதறி அன்ன - குறு 53/4 செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது - குறு 277/2 செந்நெல் அம் செறுவில் கதிர் கொண்டு களவன் - ஐங் 27/1 செந்நெல் வல்சி அறியார் தத்தம் - பதி 75/12 புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடை பூத்த - கலி 79/1 அரிந்து கால் குவித்த செந்நெல் வினைஞர் - அகம் 116/2 பால் பெய் செந்நெல் பாசவல் பகுக்கும் - அகம் 237/13 முடங்கு புற செந்நெல் தரீஇயர் ஓராங்கு - அகம் 303/12 அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த - புறம் 22/14 செந்நெல் உண்ட பைம் தோட்டு மஞ்ஞை - புறம் 344/1 பகடு தரு செந்நெல் போரொடு நல்கி - புறம் 390/22 பைது அற விளைந்த பெரும் செந்நெல்லின்/தூம்பு உடை திரள் தாள் துமித்த வினைஞர் - பெரும் 230,231 அரி செத்து உணங்கிய பெரும் செந்நெல்லின்/தெரி கொள் அரிசி திரள் நெடும் புழுக்கல் - பெரும் 473,474 பரூஉ பகடு உதிர்த்த மென் செந்நெல்லின்/அம்பண அளவை உறை குவித்து ஆங்கு - பதி 71/4,5 பழம் செந்நெல்லின் முகவை கொள்ளாள் - அகம் 126/11 பொன் நிற செந்நெல் பொதியொடு பீள் வாட - நாலடி:27 9/1 பணை தாள் கதிர் செந்நெல் பாய் வயல் ஊரன் - திணை50:32/3 செந்நெல் விளை வயல் ஊரன் சில் பகல் - திணை50:34/1 வாடாத தாமரை மேல் செந்நெல் கதிர் வணக்கம் - திணை150:129/1 செந்நெல்லால் ஆய செழு முளை மற்றும் அ - நாலடி:37 7/1 செந்தாமரை பூ உற நிமிர்ந்த செந்நெல்லின் பைம் தார் புனல்வாய் பாய்ந்து ஆடுவாள் அம் தார் - திணை150:128/1,2 செந்நெல்லே ஆகி விளைதலால் அ நெல் - நாலடி:37 7/2 வேலியின் வாய் உள தேறிய செந்நெல் விளைக்குவ பாயினவே - தேம்பா:1 66/4 சேறு இலாத செறுவில் விட்ட சிதடர் செந்நெல் வித்து அதே - தேம்பா:7 37/2 போய் இரு புடையில் செந்நெல் பொதிர்ந்த மார்கழி நாள் ஐ_ஐந்து - தேம்பா:10 2/3 அம் கண் மாதர் கட்டு அவிழ்த்து செந்நெல் முடி நடுவார் - தேம்பா:12 51/2 நெடிது ஒருங்கு செந்நெல் வளர்ந்து இவர் தொழுது ஒரு-பால் - தேம்பா:12 52/2 தேன் இரும் தலை கரும்பு உறழ் ஆடிய செந்நெல் வான் இரும் புலத்து அரிவை தான் அணி இள மதி போல் - தேம்பா:12 53/2,3 கதிர் படும் வயலில் செந்நெல் காய்த்தன நாளில் ஓர் நாள் - தேம்பா:17 18/1 வீக்க மேல் விரத செந்நெல் வித்தி நல் ஒழுக்க நீரை - தேம்பா:26 111/2 முரல் வாய் சங்கு உளைந்து ஈன்ற முத்தும் செந்நெல் முத்தும் உறழ் - தேம்பா:27 37/1 அயல் பொரு சேவலோடும் அதிர்ந்து எழ சாய்ந்த செந்நெல் வயல் பொருவு ஒழிந்த நாடு வளன் தரும் ஓதி தன்னால் - தேம்பா:28 158/2,3 வாய்ந்த செந்நெலை மறுகும் பண்டியும் - தேம்பா:1 30/1 செந்நெல் பழன கழனி-தொறும் திரை உலாவு கடல் சேர்ப்ப - புகார்:7/164 கழனி செந்நெல் கரும்பு சூழ் மருங்கின் - புகார்:10/112 கவரி செந்நெல் காய் தலை சொரிய - புகார்:10/124 சேறு அமை செறுவினுள் செந்நெல் வால் முளை - சிந்தா:1 45/1 ஆய் செந்நெல் அகன்ற காடு அரிகுற்றார்களே - சிந்தா:1 55/4 சேடு உற கூப்பிய செந்நெல் குப்பைகள் - சிந்தா:1 59/3 பணை நிலையாய் செந்நெல் பகரும் பண்டியும் - சிந்தா:1 61/2 நன்று ஆய நல் விரத செந்நெல் வித்தி ஒழுக்க நீர் - சிந்தா:4 962/2 கொண்டு உலப்ப அரிய செந்நெல் கொடி கரும்பு உடுத்த வேலி - சிந்தா:5 1184/3 வரம்பு அணைந்து அதன் நுதல் கிடந்த வார் செந்நெல் அரங்கு அணி நாடக மகளிர் ஆய் நுதல் - சிந்தா:6 1442/2,3 மழை குரல் என மயில் அகவ வார் செந்நெல் புழை கடை புனல் அலைத்து ஒழுகும் பொற்பிற்றே - சிந்தா:7 1614/3,4 களிறு மாய் கதிர் செந்நெல் கழனி நாட்டு-இடை - சிந்தா:7 1617/1 குருகினோடு இரிய செந்நெல் கொழும் கதிர் குவளை எற்ற - சிந்தா:7 1854/2 நெட்டு இரும் கரும்பொடு செந்நெல் மேய்ந்து நீர் - சிந்தா:8 1938/3 செழுந்துபட செந்நெல் நிறைத்து அம் நுண் கொடி அறுகின் - சிந்தா:12 2486/3 கான் உடை கழனி செந்நெல் கதிர் அணை துஞ்சும் நாடு - சிந்தா:13 2901/3 அயல் வளர்கின்ற ஆமான் குழவியோடு இரிந்து செந்நெல் வயல் வளர் கரும்பில் பாயும் மகதநாடு என்பது உண்டே - சிந்தா:13 3042/3,4 தேன் கண கரும்பு இயல் காடும் செந்நெலின் வான் புகழ் களிறு மாய் கழனி ஆக்கமும் - சிந்தா:1 54/2,3 காய்த்த செந்நெலின் தாழ் கதிர் நெற்றி மேல் - சிந்தா:7 1777/1 கரும்பு அலர் செந்நெல் அம் கழனி கான நாடு - அயோ:11 113/1 செந்நெல் உள தேன் ஒழுகு போதும் உள தெய்வ - ஆரண்:3 58/2 செந்நெல் அம் கழனி நாடன் திரு மகள் செவ்வி கேளா - ஆரண்:10 110/2 செந்நெல் வேலி சூழ் திரு நல் நாடு ஒரீஇ - கிட்:15 18/2 கரும்பொடு செந்நெல் காடும் கமல வாவிகளும் மல்கி - கிட்:15 31/2 நட்ட செந்நெலின் நாறு வளர்க்குமே - பால:2 26/4 கரும்பொடு செந்நெலும் கவின் கொண்டு ஓங்கிட - பால:5 44/2 செந்நெலும் கரும்பும் கமுகும் செறிந்து - கிட்:15 46/3 சடை செந்நெல் பொன் விளைக்கும் தன் நாடு பின்னா - நள:75/1 செம் தோடு பீறி தேன் செந்நெல் பசும் தோட்டில் - நள:149/3 செந்நெல் அரிவார் சினை யாமை வன் முதுகில் - நள:150/2 கொழுந்து ஏறி செந்நெல் குலை சாய்க்கும் நாடன் - நள:181/3 செந்நெல் விளைக்கும் திருநாடர் மன்ன - நள:361/2 தே நீர் அளித்து அருகு செந்நெல் கதிர் விளைக்கும் - நள:414/3 கயம் மேவிய சங்கம் தரு கழி விட்டு உயர் செந்நெல் வியல் மேவி வந்து உறங்கும் பொழில் வேணுபுரம் அதுவே - தேவா-சம்:94/3,4 மடுக்கள் மலர் வயல் சேர் செந்நெல் மலி நீர் மலர் கரை மேல் - தேவா-சம்:183/3 மாடே ஓதம் எறிய வயல் செந்நெல் காடு ஏறி சங்கு ஈனும் காழியார் - தேவா-சம்:254/1,2 தெரிந்து இலங்கு கழுநீர் வயல் செந்நெல் திருந்த நின்ற வயல் சூழ் திருப்புன்கூர் - தேவா-சம்:288/1,2 செடி ஆர் செந்நெல் திகழும் நறையூர் சித்தீச்சுரத்தாரே - தேவா-சம்:773/4 வெண் செந்நெல் விளை கழனி விழவு ஒலி கழுமலத்தான் - தேவா-சம்:1281/1 செறி இதழ் தாமரை தவிசில் திகழ்ந்து ஓங்கும் இலை குடை கீழ் செய் ஆர் செந்நெல் வெறி கதிர் சாமரை இரட்ட இள அன்னம் வீற்றிருக்கும் மிழலை ஆமே - தேவா-சம்:1417/3,4 செந்நெல் அம் கழனி பழனத்து அயலே செழும் - தேவா-சம்:1470/1 செந்நெல் ஆரும் வயல் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி - தேவா-சம்:1553/3 செந்நெல் வயல் ஆர்தரு திரு புகலி ஆமே - தேவா-சம்:1779/4 மேய்ந்து இளம் செந்நெல் மென் கதிர் கவ்வி மேல்படுகலில் மேதி வைகறை - தேவா-சம்:2040/1 நண்டு உண நாரை செந்நெல் நடுவே இருந்து விரை தேரை போதும் மடுவில் - தேவா-சம்:2374/3 தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர் செம்பொன் எங்கும் நிகழ - தேவா-சம்:2398/1 கால் ஆடு நீல மலர் துன்றி நின்ற கதிர் ஏறு செந்நெல் வயலில் - தேவா-சம்:2429/3 மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயல் செந்நெல் அறுத்த வாய் அசும்பு பாயும் அம் தண் ஆரூர் என்பதே - தேவா-சம்:2570/3,4 வாய்ந்த செந்நெல் விளை கழனி மல்கும் வயல் காழியான் - தேவா-சம்:2713/1 புடை கொள் செந்நெல் விளை கழனி மல்கும் புகலூர்-தனுள் - தேவா-சம்:2716/2 செந்நெல் ஆர் வள வயல் தென்குடித்திட்டையே - தேவா-சம்:3170/4 மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர் மன்னு பொழில்-வாய் - தேவா-சம்:3658/3 பெரிய செந்நெல் பிரம்புரி கெந்தசாலி திப்பியம் என்று இவை அகத்து - தேவா-அப்:204/3 அருகு எலாம் குவளை செந்நெல் அகல் இலை ஆம்பல் நெய்தல் - தேவா-அப்:535/1 ஆலை கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த - தேவா-அப்:826/3 செந்நெல் ஆர் வயல் சூழ் திரு கோளிலி - தேவா-அப்:1642/3 செந்நெல் ஆர் வயல் சேறையுள் செந்நெறி - தேவா-அப்:1840/3 கரும்பு உயர்ந்து பெரும் செந்நெல் நெருங்கி விளை கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே - தேவா-சுந்:406/4 தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடம் தரள மென் கரும்பின் தாழ் கிடங்கின் அருகே - தேவா-சுந்:411/3 மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே - தேவா-சுந்:581/4 கரும்பினை பெரும் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர் கண்டுகொண்டேனே - தேவா-சுந்:598/4 செந்நெல் ஆர் வயல் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே - தேவா-சுந்:661/4 செந்நெல் அம் கழனி சூழ் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால் - தேவா-சுந்:701/3 களை களைந்து எனை ஆளலுறு கண்டன் இடம் செந்நெல் வளை விளை வயல் கயல் பாய்தரு குண வார் மணல் கடல்-வாய் - தேவா-சுந்:725/2,3 செந்நெல் அங்கு அலம் கழனி திகழ் திரு வாஞ்சியத்து உறையும் - தேவா-சுந்:780/1 செந்நெல் வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு - தேவா-சுந்:844/3 செந்நெல வயல் அணி சிறுகுடி மேவிய - தேவா-சம்:3845/1 கோடு இலங்கும் பெரும் பொழில்கள் மல்க பெரும் செந்நெலின் காடு இலங்கும் வயல் பயிலும் அம் தண் கடல் காழியே - தேவா-சம்:2697/3,4 கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம் - தேவா-சம்:3331/3 கிடா கொண்டு செந்நெல் அறுக்கின்றவாறே - திருமந்:2878/4 அரி தரு செந்நெல் சூட்டின் அடுக்கிய அடுக்கல் சேர்ப்பார் - 1.திருமலை:2 23/1 சேடு கொண்ட ஒளி தேர் நிரை-தோறும் செந்நெல் அன்ன மலை சாலைகள்-தோறும் - 1.திருமலை:5 101/3 செல்லல் நீங்க பகல் வித்திய செந்நெல் மல்லல் நீர் முளை வாரி கொடு வந்தால் - 2.தில்லை:4 13/1,2 செந்நெல் ஆர் வயல் கட்ட செந்தாமரை - 3.இலை:6 2/1 செந்நெல் இன்னமுதோடு செங்கீரையும் - 3.இலை:6 6/2 அன்பு போல் தூய செந்நெல் அரிசி மாவடு மென் கீரை - 3.இலை:6 14/2 மருங்கு வளர் கதிர் செந்நெல் வய புரவி முகம் காட்ட - 5.திருநின்ற:1 6/2 செந்நெல் ஆர் வயல் தீம் கரும்பின் அயல் - 5.திருநின்ற:2 1/2 கரும்பு செந்நெல் பைம் கமுகொடு கலந்து உயர் கழனி அம் பணை நீங்கி - 6.வம்பறா:1 153/1 செந்நெல் வயல் செங்கமல முகம் மலரும் திருச்சாத்தமங்கை மூதூர் - 6.வம்பறா:1 459/3 செம்பொனின் பரிகலத்தினில் செந்நெல் வெண் பரப்பின் - 6.வம்பறா:1 1185/1 செந்நெல் அடிசில் பிறங்கல் உணவு ஓவா திரு மடங்கள் - 8.பொய்:6 3/4 செந்நெல் மலை குவடு ஆக செய்து வரும் திருப்பணியே - 10.கடல்:5 2/3 ஏந்தலார் தாம் எய்தும் அளவும் வேண்டும் செந்நெல் வாய்ந்த கூடு அவை கட்டி வழி கொள்வார் மொழிகின்றார் - 10.கடல்:5 3/3,4 செந்நெல்லும் பொன் அன்ன செழும் பருப்பும் தீம் கரும்பின் - 6.வம்பறா:2 11/1 நல்ல செந்நெலின் பெற்றன நாயனார்க்கு - 3.இலை:6 9/3 செந்நெலின் அரிசி சிந்த செவியுற வடுவின் ஓசை - 3.இலை:6 23/2 சேறு செய்பவர் செந்நெலின் வெண் முளை சிதறி - 4.மும்மை:5 24/2 ஓங்கு செந்நெலின் புடையன உயர் கழை கரும்பு - 4.மும்மை:5 27/1 காய்த்த செந்நெலின் காடு சூழ் காவிரி நாட்டு - 5.திருநின்ற:6 1/2 காம்பினில் திகழ் கரும்பொடு செந்நெலின் கழனி அம்பணை நீங்கி - 6.வம்பறா:1 538/3 செந்நெல் ஆர் வயல் சூழ் திருக்கோட்டியூர் - நாலாயி:22/1 செந்நெல் அரிசி சிறுபருப்பு செய்த அக்காரம் நறு நெய் பாலால் - நாலாயி:208/1 புரவி முகம்செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவை - நாலாயி:337/2 வரம்புற்ற கதிர் செந்நெல் தாள் சாய்த்து தலைவணக்கும் தண் அரங்கமே - நாலாயி:419/4 செந்நெல் ஆர் கவரி குலை வீசு தண் திருவயிந்திரபுரமே - நாலாயி:1154/4 செந்நெல் கூழை வரம்பு ஒரீஇ அரிவார் முகத்து எழு வாளை போய் கரும்பு - நாலாயி:1190/3 எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி இலை கொடி ஒண் குலை கமுகோடு இசலி வளம் சொரிய - நாலாயி:1230/3 இளம்படி நல் கமுகு குலை தெங்கு கொடி செந்நெல் ஈன் கரும்பு கண்வளர கால் தடவும் புனலால் - நாலாயி:1234/3 கடி உடை கமலம் அடியிடை மலர கரும்பொடு பெரும் செந்நெல் அசைய - நாலாயி:1346/3 சீர் தழைத்த கதிர் செந்நெல் செங்கமலத்து இடையிடையில் - நாலாயி:1534/1 செந்நெல் மலி கதிர் கவரி வீச சங்கம் அவை முரல செங்கமல மலரை ஏறி - நாலாயி:1619/3 பிளந்து வளைந்த உகிரானை பெரும் தண் செந்நெல் குலை தடிந்து - நாலாயி:1721/3 உவரி ஓதம் முத்து உந்த ஒரு-பால் ஒரு-பால் ஒண் செந்நெல் கவரி வீசும் கண்ணபுரத்து அடியேன் கண்டுகொண்டேனே - நாலாயி:1726/3,4 செந்நெல் ஒண் கவரி அசைய வீற்றிருக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே - நாலாயி:1752/4 செந்நெல் ஒண் கழனி திகழ் வனம் உடுத்த - நாலாயி:2672/40 கலி மிக்க செந்நெல் கழனி குறையல் கலை பெருமான் - நாலாயி:2878/1 மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக்குருகூர்-அதனுள் - நாலாயி:3334/3 சேற்றில் செந்நெல் கமலம் ஓங்கு திருக்குருகூர்-அதனுள் - நாலாயி:3335/3 செறுவில் செந்நெல் கரும்பொடு ஓங்கு திருக்குருகூர்-அதனுள் - நாலாயி:3339/3 சேற்று தாமரை செந்நெல் ஊடு மலர் சிரீவரமங்கல நகர் - நாலாயி:3407/3 சீர் ஆர் செந்நெல் கவரி வீசும் செழு நீர் திருக்குடந்தை - நாலாயி:3418/3 செய் கொள் செந்நெல் உயர் திருவண்வண்டூர் உறையும் - நாலாயி:3451/2 நோக்கும் பக்கம் எல்லாம் கரும்பொடு செந்நெல் ஓங்கு செந்தாமரை - நாலாயி:3500/1 எண் திசையும் ஈன் கரும்பொடு பெரும் செந்நெல் விளைய - நாலாயி:3895/3 செம் கயலும் வாளைகளும் செந்நெலிடை குதிப்ப சேல் உகளும் செழும் பணை சூழ் வீதி-தொறும் மிடைந்து - நாலாயி:1236/3 சேறு கொள் கரும்பும் பெரும் செந்நெலும் மலி தண் சிரீவரமங்கை - நாலாயி:3416/3 ஆடு உறு தீம் கரும்பும் விளை செந்நெலும் ஆகி எங்கும் - நாலாயி:3436/2 வாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும் வயல் சூழ் திருவாறன்விளை - நாலாயி:3663/2 ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து - நாலாயி:3762/1 ஓங்கு பெரும் செந்நெலூடு கயல் உகள - நாலாயி:476/4 சேற்று இள வாளை செந்நெலூடு உகளும் செழும் பனை திருப்புளிங்குடியாய் - நாலாயி:3800/3 கரும்பு ஆர் நீள் வயல் காய் கதிர் செந்நெலை கற்று ஆநிரை மண்டி தின்ன - நாலாயி:228/1 செந்நெலொடு செங்கமலம் சேல் கயல்கள் வாளை செங்கழுநீரொடு மிடைந்து கழனி திகழ்ந்து எங்கும் - நாலாயி:1232/3 சேண் இடம் கொள் மலர் கமலம் சேல் கயல்கள் வாளை செந்நெலொடும் அடுத்து அரிய உதிர்ந்த செழு முத்தம் - நாலாயி:1243/3 கோல செந்நெற்கள் கவரி வீசும் கூடு புனல் திருப்பேரெயிற்கே - நாலாயி:3588/4 திருவும் செல்வமும் திகழ்தர காண்பன செந்நெல் - சீறா:867/4 செந்நெல் அம் கழனி சூழும் திமஸ்கினின் ஹபீபு வேந்தன் - சீறா:1730/1 செந்நெல் சூழ் நகரம் காண்பது அரிது என செப்பினாரால் - சீறா:4954/4 போர் தலை திறந்து திரித்து வை நீத்து பொன் நிற செந்நெல்லை குவித்து - சீறா:60/2 செந்நெலில் பெருக்கின் கனை குரல் சகடம் திசை-தொறும் மலிந்தன செருக்கும் - சீறா:61/1 நாடு எலாம் நெடும் புனல் வயல் கழனியின் நடுவு எலாம் விளை செந்நெல் - வில்லி:11 53/4 செந்நெல் வயலூடு முது சேல் உகளும் நாடா - வில்லி:23 11/3 தீம் சாறு பாயும் செழு நீர் வயல் செந்நெல் வேலி - வில்லி:36 24/2 சேறு இலாத செறுவில் வித்து செந்நெல் என்ன அவன் உடல் - வில்லி:42 29/3 செந்நெலின் வாளை பாயும் செல்வ நாடு உடைய கோமான் - வில்லி:11 12/2 செந்நெலே கன்னல் காட்ட சேர்ந்து அயல் செறுவில் நின்ற - வில்லி:22 105/1 தோகை செந்நெல் சவட்டி பாசிலை - மகத:2/18 ஆலை கரும்பும் அரியுறு செந்நெலும் பாளை கமுகின் படுவும் சுட்டி - உஞ்ஞை:39/60,61 கொழும் களி உழுந்தும் செம் கதிர் செந்நெலும் உப்பும் அரிசியும் கப்புர பளிதமொடு - இலாவாண:4/88,89
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்