Skip to content

சொல் பொருள்

(பெ) 1. உயர்வு, சிறப்பு, பெருமை, 2. வாடிய பூ, 3. முல்லைப்பூ வகை, சாதிப்பூ,, 4. பண்பில் சிறந்தவர், உயர்ந்தவர், 5. தலைமை, 

சொல் பொருள் விளக்கம்

1. உயர்வு, சிறப்பு, பெருமை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

greatness, pre-eminence, faded flower, Large-flowered jasmine. Flower of Jasminum grandiflorum, distinguished, illustrious person, Greatness, excellence, superiority

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

எய்யா நல் இசை செ வேல் சேஎய்
சேவடி படரும் செம்மல் உள்ளமொடு – திரு 61,62

அளந்தறியமுடியாத நல்ல புகழினையும், செவ்விய வேலையும் உடைய முருகக்கடவுளின் –
திருவடியில் செல்லுதற்குரிய பெருமைகொண்ட உள்ளத்தோடு

அரக்கத்து அன்ன செம் நில பெரு வழி
காயாம் செம்மல் தாஅய் பல உடன் – அகம் 14/1,2

செவ்வரக்கினைப் போன்ற சிவந்த நிலத்தில் செல்லும் பெருவழியில்
காயாம்பூவின் வாடிய பூக்கள் பரவிக்கிடக்க

செம் நீர் பொது வினை செம்மல் மூதூர்
தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ – நற் 130/4,5

செவ்விய பண்புகளைக் கொண்ட, பொதுக்காரியங்களைச் செய்யும் நம் தலைவர், இந்தப் பழமையான ஊரில்
தாமாகவே இங்கு உழைத்துண்ணும் வாழ்க்கையைக் காட்டிலும் இனியது உண்டோ?

உடை நிலை நல் அமர் கடந்து மறம் கெடுத்து
கடும் சின வேந்தர் செம்மல் தொலைத்த
வலம் படு வான் கழல் வயவர் பெரும – பதி 70/9-11

தனக்கே உரித்தானதாகப் பெற்ற நிலையையுடைய நல்ல போர்களை வென்று, எதிர்ப்போரின் வீரத்தை அழித்து,
மிக்க சினத்தையுடைய வேந்தர்களின் தலைமையினையும் இல்லாமற்செய்த
வெற்றி பொருந்திய பெரிய கழல் அணிந்த வீரர்களுக்குத் தலைவனே!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *