சொல் பொருள்
(பெ) பெருமை, சிறப்பு,
சொல் பொருள் விளக்கம்
பெருமை, சிறப்பு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
greatness, excellence
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சேடு இயல் வள்ளத்து பெய்த பால் சில காட்டி – கலி 72/3 சிறப்பான இயல்புடைய கிண்ணத்தில் ஊற்றிய பாலைச் சிறிதளவு எடுத்துக்காட்டி தார் அணி யானை சேட்டு இரும் கோவே – புறம் 201/13 தார் அணிந்த யானையினையுடைய பெரிய இருங்கோவே – மாடு – மாட்டு(க்கொம்பு) என்பது போல, சேடு – சேட்டு என வந்தது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்