Skip to content

சொல் பொருள் விளக்கம்

ஆண்கடன்

சொல் பொருள் ஆண்களாய் உள்ளார் தம்கீழ் வாழ்வாரைக் காத்தற் பொருட்டு அவர்க்கு அவர் செய்யும் கடன் சொல் பொருள் விளக்கம் ஆண்களாய் உள்ளார் தம்கீழ் வாழ்வாரைக் காத்தற் பொருட்டு அவர்க்கு அவர் செய்யும் கடன்.… Read More »ஆண்கடன்

ஆண்

சொல் பொருள் ஆண்மக்கள் சொல் பொருள் விளக்கம் ஆண்மக்கள் தம்மையும் தம் இந்திரியங்களையும் பிறரையும் ஆளும் வன்மையினாலேயே இப் பெயர் பெறுவர். (திருக்குறள். அழகும் அமைப்பும். 102)

ஆடவர்

சொல் பொருள் வீரர் சொல் பொருள் விளக்கம் ஆடவர்-வீரர் என்னும் பொருட்டு. “ஆடவன் கொன்றான் அச்சோ” என்பது பெரிய புராணம். (திருவிளை. சுந்தரப்போர். 26. ந. மு. வே.)

ஆசை

சொல் பொருள் ஆசு என்பது குற்றமெனக்கொண்டு, பற்று வைத்தல் குற்றமாம் என்ற கருத்தில் ‘ஆசை’ என்பது தமிழ் என்பாரும் உளர். சொல் பொருள் விளக்கம் ஆசை என்பது தமிழில் வழங்கும் பெருவழக்காகிய வடசொல் என்ப,… Read More »ஆசை

ஆசிரியர்

சொல் பொருள் மாணாக்கர்க்குப் பற்றுக் கோடானவர் சொல் பொருள் விளக்கம் ஆசு – பற்றுக்கோடு. மாணாக்கர்க்குப் பற்றுக் கோடானவர். (வடசொற்றமிழ் அகரவரிசை. 306.)

ஆசிரியப்பா

சொல் பொருள் சீரினானும் பொருளினானும் ஓசையினானும் ஆகிய நுண்மையைத் தன்கண் நிறுவிற்று ஆகலானும், புற நிலை வாழ்த்து முதலாகிய பொருள்களை ஆசிரியனே போல நின்று அறிவிக்கும் ஆகலானும் ‘ஆசிரியம்’ என்பதும் காரணக் குறி. சொல்… Read More »ஆசிரியப்பா

அன்புடைமை

சொல் பொருள் தன்னைச் சார்ந்தார் மாட்டுக் காதல் உடையவன் ஆதல் சொல் பொருள் விளக்கம் அன்புடைமையாவது தன்னைச் சார்ந்தார் மாட்டுக் காதல் உடையவன் ஆதல். (திருக். அன்புடைமை. மணக்.)

அன்பு

சொல் பொருள் அன்பு என்பது அருட்கு முதலாகி மனத்தில் நிகழும் நேயம் தன் கிளை செறாமை, காதல், தான் வேண்டப்பட்ட பொருளின்கண் தோன்றும் உள்ள நிகழ்ச்சி அன்று என்னும் அன்பு தமக்கன்று என்னும் கருத்தில்… Read More »அன்பு

அற்றை

சொல் பொருள் சிறுமை சொல் பொருள் விளக்கம் அற்றை: சிறுமை. மேன்மையற்று நிற்கும் நிலையாதலிற் சிறுமையாயிற்று. (தமிழ் வியா. 55.)

அறும்பு

சொல் பொருள் கொடுமை, பஞ்சகாலம்; சொல் பொருள் விளக்கம் கொடுமை, பஞ்சகாலம்; ‘அறுப்பு’ என்பது மெலித்தல் விகாரம் பெற்று ‘அறும்பு’ என நின்றது. நன்மையற்றுக் கொடுமையையும் நாட்டின்கண் உணவுப் பொருட்களெல்லாம் அறுங்காலமாதலிற் பஞ்சகாலத்தையுங் குறிப்பதாயிற்று.… Read More »அறும்பு