ஞமலி என்பது நாய்
1. சொல் பொருள்
(பெ) நாய்,
2. சொல் பொருள் விளக்கம்
நாய்,
பார்க்க நாய், ஞாளி, செந்நாய், செல்நாய்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
dog
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி/திளையா கண்ண வளைகுபு நெரிதர – குறி 131,132
(மூங்கில்)முளை(போலும்) கூர்மையுள்ள பற்களையுடைய, பெரிய நகங்களையுடைய, நாய்
ஞமலி தந்த மனவு சூல் உடும்பின் – பெரும் 132
மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது – பெரும் 299
கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை – பட் 140
மதம் தபு ஞமலி நாவின் அன்ன – மலை 42
மனைவாய் ஞமலி ஒருங்கு புடை ஆட – நற் 285/5
அரவ வாய் ஞமலி மகிழாது மடியின் – அகம் 122/9
விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய – அகம் 140/9
சினவு கொள் ஞமலி செயிர்த்து புடை ஆட – அகம் 388/14
தொடர் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய – புறம் 74/3
எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன – குறு 179/2
பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கி – பெரும் 112
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்