Skip to content

சொல் பொருள்

நெரிவுறு, பரவு, பரப்பு

சொல் பொருள் விளக்கம்

நெரிவுறு, பரவு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be crushed, be pressed out as pulp, spread, spread over

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மார்பு உறு முயக்கு இடை ஞெமிர்ந்த சோர் குழை – நற் 20/9

மார்பு முயக்குதலால் நெரிப்புண்டு உதிர்ந்த பூந்தளிர்களையுடைய

வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து
சிதரல் பெரும் பெயல் சிறத்தலின் தாங்காது – மது 243,244

மலை அடிவாரத்தில் முழங்கும் இடிகளோடே முகில்கள் பரவி,
சிதறுதலையுடைய பெரு மழை மிகுதலால், பெருக்கெடுத்து,

தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – நெடு 90

கொண்டுவந்த மணலைப் பாவப்பட்ட, அழகிய வீட்டின் முற்றத்தில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *