Skip to content
தகரம்

தகரம் என்பதுஒரு வாசனை மரம்

1. சொல் பொருள்

(பெ) 1. ஒரு வாசனை மரம், 2. தகர மரக்கட்டையை அரைத்துக் குழைத்துச்செய்த மயிர்ச்சாந்து, 3. ஈயம், வெள்ளீயம்

2. சொல் பொருள் விளக்கம்

1. ஒரு வாசனை மரம்(அகரு?)

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Wax-flower dog-bane, Tabernae montana, Eagle-wood, Aquilaria agallocha, agar wood.

Aromatic unguent for the hair

Tin

தகரம்
தகரம்

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

தண் நறும் தகரம் கமழ மண்ணி - குறி 108

தகரம் நீவிய துவரா கூந்தல் - பதி 89/16

போர் ஏற்றன்று நவின்று தகரம்/மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று - பரி  12/96,97

யான் போது துணைப்ப தகரம் மண்ணாள் - அகம் 117/11

தகரம் நாறும் தண் நறும் கதுப்பின் - அகம் 141/13

நன் மாண் விழவில் தகரம் மண்ணி - அகம் 385/6

தகரம் மண்ணிய தண் நறு முச்சி - அகம் 393/23

தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி - பரி 12/6

நறும் தண் தகரமும் நானமும் நாறும் - கலி 93/21

நறும் தண் தகரம் வகுளம் இவற்றை - திணை150:24/1
தகரம் வரு-வழி ஆய்தம் நிலையலும் - எழுத். புள்.மயங்:74/1

தகரம் வரூஉம்-காலையான - எழுத். புள்.மயங்:104/2

ஒன்பான் ஒகர-மிசை தகரம் ஒற்றும் - எழுத். குற்.புண:40/1

ஒற்றிய தகரம் றகரம் ஆகும் - எழுத். குற்.புண:40/5

ஒற்று மிகு தகரமொடு நிற்றலும் உரித்தே - எழுத். புள்.மயங்:49/1

தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து - நெடு 55
கவரி,
அயல
தகர தண் நிழல் பிணையொடு வதியும் – புறம் 132/4-6

கவரிமா
பக்கத்திலுள்ள
தகரமரத்தின் குளிர்ந்த நிழலின்கண் தனது பிணையுடனே தங்கும்

தகரம் நீவிய துவரா கூந்தல் – பதி 89/16

மணம்வீசும் தகரமயிர்ச்சாந்து பூசிய எண்ணெய்ப்பசை நீங்காத கூந்தல்

தகர புன்னை தாழை பொழில் சேர் சண்பை நகராரே - தேவா-சம்:714/4

தகரம் அணி அருவி தட மால் வரை சிலையா - தேவா-சம்:952/1

தூமமும் புழுகும் தகரமும் சாந்தும் தோய்ந்து இருண்டு அடர்ந்த பூம் குழலார் - சீறா:144/2

தகரமும் விரவி வெண் பூ தனித்தனி சிதறி வாய்ந்த - சீறா:3211/3

தகரம் கவினிய தண் வரை சாரல் - உஞ்ஞை:50/21

தகரம் கலந்த தண் நறும் சாந்தினர் - இலாவாண:4/146

தகரம் கமழும் தண் வரை சாரல் - இலாவாண:12/4

தண் பூம் தணக்கம் தமாலம் தகரம்
ஒண் பூம் காந்தள் வெண் பூம் சுள்ளி - இலாவாண:15/15,16

கிழங்கும் மஞ்சளும் கொழும் கால் தகரமும்
கடு படு கனியும் காழ் திப்பிலியும் - உஞ்ஞை:51/27,28

அம் தண் தகரமும் அரக்கும் அகிலும் - மகத:17/138

வேரியும் தகரமும் விரையும் உரிஞ்சி - வத்தவ:16/6
தகரம்
தகரம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *