Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வீட்டின் உள்கட்டு, 2. படைகளின் அணிவகுப்பு, 3. கட்டுமானம், 4. அரண்மனைக் கட்டுமானம்

சொல் பொருள் விளக்கம்

1. வீட்டின் உள்கட்டு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

inner portion of a house, Battle array of an army, built structure, Palatial building

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொடும் திண்ணை பல் தகைப்பின்
புழை வாயில் போகு இடைகழி
மழை தோயும் உயர் மாடத்து – பட் 143-145

சுற்றுத் திண்ணையினையும், பல உள்கட்டுக்களையும்,
சிறுவாசலையும், பெரியவாசலையும், நீண்ட நடை(ரேழி)களையும் உடைய
மேகங்களை எட்டித்தொடும்(அளவுக்கு) உயரமான மாடத்தில்

ஆர் அரண் கடந்த தார் அரும் தகைப்பின்
பீடு கொள் மாலை பெரும் படை தலைவ – பதி 24/4,5

கடத்தற்கரிய அரண்களை அழித்துச் செல்லும் முன்னணிப்படையின் அரிய அணிவகுப்பினையுடைய
பெருமை கொள்ளும் இயல்பினையுடைய பெரும் படைக்குத் தலைவனே!

எந்திர தகைப்பின் அம்பு உடை வாயில் – பதி 53/7

(வில் இல்லாமல்) எந்திரக் கட்டுமானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அம்புகளை உடைய வாயில்

களிறு நிலை முணைஇய தார் அரும் தகைப்பின்
புறஞ்சிறை வயிரியர் காணின் – பதி 64/7,8

களிறுகள் நிற்பதற்கு வெறுத்த, ஒழுங்காக அமைந்த உயர்ந்த கட்டுக்காவலையுடைய அரண்மனையின்
வெளிப்புறத்தில் கூத்தர்கள் வரக் காணும்போது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *