Skip to content

சொல் பொருள்

(பெ) 1. படை, 2. அனாவசியமாய் ஏற்படும் இழப்பு, 3. தண்டனை

சொல் பொருள் விளக்கம்

பார்க்க : பொருள்பிணி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

army, Loss; useless expense;, punishment

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தண்டம் இரண்டும் தலைஇ தாக்கி நின்றவை – பரி 10/60

படைகள் இரண்டும் ஒருவரையொருவர் தாக்கி நின்றவை

தன் மார்பும் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும் – பரி 20/64

தன்னுடைய தலைவனின் மார்பை உனக்கு வீணாகத் தந்திருக்கும் முத்துமாலையையுடைய இவளின் மார்பும்

வந்து அடி பொருந்தி முந்தை நிற்பின்
தண்டமும் தணிதி நீ பண்டையின் பெரிதே – புறம் 10/5,6

வந்து நின் பாதத்தை அடைந்து முன்னே நிற்பாராயின்
அவரைச் செய்யும் தண்டமும் தணிவை நீ, முன்னைக்காட்டிலும் பெரிதான அருளினால்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *