சொல் பொருள்
(பெ) 1. மகரந்தம், 2. தேன், 3. தூள்,பொடி, நீறு,
சொல் பொருள் விளக்கம்
1. மகரந்தம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pollen, honey, powder, dust
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நறும் தாது ஆடிய தும்பி பசும் கேழ் பொன் உரை கல்லின் நன் நிறம் பெறூஉம் – நற் 25/3,4 மணமிக்க மகரந்தத்தூளில் அளைந்து ஆடிய தும்பி, பசிய நிறத்தையுடைய பொன்னை உரைத்துப்பார்க்கும் கல்லைப் போன்று நல்ல நிறத்தைப் பெறும் தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா வண்டு ஓர் அன்ன அவன் தண்டா காட்சி – நற் 25/9,10 தேனை உண்ணும் வேட்கையினால் மலரின் தன்மையை ஆராயாமல் போய் விழுகின்ற வண்டின் ஒரு தன்மையை ஒத்த அவனது கெடாத காட்சியை பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர் – மது 399 பலர் கூடி இடித்த துகள் பறக்கும் சுண்ணாம்பு உடையவரும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்