Skip to content

சொல் பொருள்

(வி) 1. கொடு,வழங்கு,அளி, 2. பர, 3. தாவு, பாய், 

2. (பெ) 1. குற்றம், 2. துன்பம், வருத்தம், 3. வலிமை, 

சொல் பொருள் விளக்கம்

1. கொடு,வழங்கு,அளி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

give, offer, spread, rush, jump, fault, blemish, distress, pain, power, might

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய
கொடுத்து அவை தா என கூறலின்
இன்னாதோ நம் இன் உயிர் இழப்பே – குறு 349/5-7

தமக்கு இன்னல் வருமே என்று அஞ்சி, கேட்பவர் வேண்டியவற்றைக்
கொடுத்துவிட்டு, பின்னர் அவற்றைத் தா என்று கூறுவதனிலும்
இன்னாததோ நம் இனிய உயிரை இழத்தல்?

நூல் கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென்று அசைஇ தா துளி மறைப்ப – நெடு 184,185

நூலால் சட்டத்தே கட்டின முத்துமாலையை உடைய கொற்றக்குடை
தவ்வென்னும் ஓசைபட்டு அசைந்து, பரக்கின்ற துளியை மறைக்க

கிழங்கு அகழ் நெடும் குழி மல்க வேங்கை
பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு – ஐங் 208/2,3

கிழங்கிற்காகத் தோண்டிய ஆழமான குழி நிறைய, வேங்கை மரத்தின்
பொன்னிற மிக்க புதிய மலர்கள் பரவிக்கிடக்கும் அவருடைய நாட்டின்

கரும் கண் தா கலை பெரும்பிறிது உற்று என – குறு 69/1

கரிய கண்ணையுடைய தாவித்திரியும் ஆண்குரங்கு இறந்துபோனதாக

தா இல் கொள்கை தம் தொழில் முடி-மார்
மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே – திரு 89,90

குற்றம் இல்லாத நோன்புகளையுடைய தமது தவத்தொழிலை முடிப்பாருடைய
நெஞ்சில் பொருந்தித் தோன்றுகின்ற ஒளி மிக்க நிறத்தையுடைய திருமுகங்களில்

வெம் சுடர் கரந்த கமம் சூல் வானம்
நெடும் பல் குன்றத்து குறும் பல மறுகி
தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்து – நற் 261/3-5

வெம்மையான ஞாயிற்றை மறைத்த நிறைந்த சூல்கொண்ட மேகங்கள்
நெடிய பலவான குன்றுகளில் சிறியதாகவும் பலவாகவும் அலைந்துதிரிந்து,
துன்பமில்லாத பெரும் மழையாகப் பெய்யத்தொடங்கிய நடுயாமத்தில்,

மா இரும் தாழி கவிப்ப
தா இன்று கழிக என் கொள்ளா கூற்றே – நற் 271/11,12

பெரிய கரிய தாழியிலிட்டுக் கவித்து மூடும்படி
வலிமையற்று இறந்தொழிக என் உயிரை எடுத்துக்கொள்ளாத கூற்றம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *