Skip to content

தானம் தவம்

சொல் பொருள்

தானம் – கொடை

தவம் –சேவையைப் பெருக்குவதாய், அமைவதே தவம்.

சொல் பொருள் விளக்கம்

தானம் – கொடை, பொருட்கொடை மட்டுமன்று தன்னைத் தரும் கொடையும் தானமேயாம். தன்- தான்- தானம் – என அதன் தோற்றமே,

‘வாள் தந்தனனே தலை எனக்கீய’

என்னும் தலைக் கொடையாளி குமணனை நினைவூட்டும்.

தவம் என்பது ‘தவ்’ என்னும் வேர் வழியது தவ்-சுருக்கம்

உண்டி, உடை, உறைவு எல்லாம் எளிமையதாய் தேவையைச் சுருக்குவதாய், சேவையைப் பெருக்குவதாய், அமைவதே தவம்.

தானம் தவம் இரண்டும் தங்கா, வானம் வழங்காதெனின் என்பது வள்ளுவம். (குறள் 29)

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *