Skip to content
தாரம்

தாரம் என்பது அரிய பண்டம்

1. சொல் பொருள்

(பெ) 1. அரிய பண்டம், அரும்பொருட்கள், 2. மந்தாரம், தேவதாருமரம், 3. மனைவி

2. சொல் பொருள் விளக்கம்

தாரம் என்பது மிகவும் அரிதிற் கிடைக்கக்கூடிய பண்டம். எனவே மிகவும் விலையுயர்ந்த உணவுப்பண்டமும் தாரம் எனப்படுகிறது.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

rare / valuable thing or article or food

A celestial tree

Wife

தாரம்
தாரம்

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

தாழ்கோள் பலவின் சூழ்சுளைப் பெரும்பழம்
வீழ் இல் தாழை குழவித் தீநீர்க்
கவைமுலை இரும்பிடிக் கவுள்மருப்பு ஏய்க்கும்
குலைமுதிர் வாழைக் கூனி வெண்பழம்
திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும்
தீம் பல் தாரம் முனையின் சேம்பின் – பெரும். 356 – 361

பசித்து வரும் பாணனுக்கு வெறும் கூழ்கூட அமிழ்தமாய் இருக்கும் அவனுக்கு, பாலாச்சுளைகளும், இனிய தென்னையிளநீரும், வாழைப்பழங்களும், நுங்கும் கொடுத்தால் அது பெரிய விருந்தாகவே அமைந்துவிடாதோ! இதைப் போன்ற உணவைத் தீம் பல் தாரம் என்கிறார் பெரும்பாணாற்றுப்படைப் புலவர்.

இடி கலப்பு அன்ன நறு வடி மாவின்
வடி சேறு விளைந்த தீம் பழ தாரம்
தூவல் கலித்த இவர் நனை வளர் கொடி – மலை 512,513

தேன் போன்ற சதைப்பற்று முதிர்ந்த இனிய பழங்களாகிய அரும்பண்டங்களும்,

தாரம்
தாரம்

தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி – பரி 12/6

தகர மரம், ஞாழல் மரம், தேவதாரு மரம் ஆகியவற்றைச் சாய்த்துச் சுமந்துகொண்டு,

மணல் மலி முன்றில்
வரையாத் தாரம் வருவிருந்து அயரும்
தண்குடி வாழ்நர் அம்குடிச் சீறூர் – நற். 135/2-4

மிகவும் நெருக்கமான உறவினர் வரும்போது நம் மனையிலுள்ள விலையுயர்ந்த பண்டங்களை அவர்களுக்கு உண்ணக்கொடுப்போம். ஆனால் அவர்களே முன்பின் அறிமுகமில்லாத புதிய விருந்தினராய் இருந்தால் நாம் சற்று யோசிப்போம் இல்லையா! ஆனால் சிற்றூர்களில் இருக்கும் ஏழை மக்கள் தம் வீட்டுக்கு யார் விருந்தினராக வந்தாலும் அவர்களுக்கு அரிய பொருள்களைத் தாராளமாகக் கொடுப்பர் என்று சங்கப் புலவர் கூறுகிறார்.

ஆண்டு நீர் பெற்ற தாரம் ஈண்டு இவர் – பதி 48/5

அங்கு, நீரில் பெற்ற அரும் பொருள்களை, இங்கு இவரின்

வருநர் வரையா செழும் பல் தாரம்/கொளகொள குறையாது தலைத்தலை சிறப்ப – பதி 88/26,27

பெருங்கூட்டமான இரவலருக்கும் – வரையாது வழங்கும் செழுமையான, பலவாகிய செல்வம்,

தாரம்
தாரம்

கீழ்ப்படு தாரம் உண்ணா மேல் சினை – அகம் 171/12

தரையில் கிடக்கும் உணவினைக் கொள்ளாமல், மேலேயுள்ள கிளைகளில் உள்ள

தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி – பரி 12/6

தகர மரம், ஞாழல் மரம், தேவதாரு மரம் ஆகியவற்றைச் சாய்த்துச் சுமந்துகொண்டு,

மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு – அகம் 282/8

மூன்று வெவ்வேறான பண்டங்களையும் ஒன்று சேர்த்து எடுத்துக்கொண்டு

மலை தாரமும் கடல் தாரமும்/தலைப்பெய்து வருநர்க்கு ஈயும் – புறம் 343/7,8

மலையில் உள்ள பொருட்களையும் கடலில் உள்ள பொருட்களையும்

பல் வேறு தாரமொடு கல்அகத்து ஈண்டி – மது 290

பலவாய் வேறுபட்ட பண்டங்களும் கல்தரையில் குவிக்கப்பட்டு,

அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு/புத்தேள்_உலகம் கவினி காண்வர – மது 697,698

அளந்து முடிவு அறியாத வளப்பம் பொருந்தின பண்டங்களோடு,

ஏறி தரூஉம் இலங்கு மலை தாரமொடு/வேய் பெயல் விளையுள் தே கள் தேறல் – மலை 170,171

(மலை மீது)ஏறிக் கொண்டுவந்த பொலிவுள்ள மலையின் அரும்பொருட்களோடு,

அரிய பண்டம்
தாரம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *