சொல் பொருள் விளக்கம்
(பெ) 1. மாலை, கட்டியமாலை, 2. கிளியின் கழுத்தில் இருக்கும் பட்டையான அமைப்பு, 3. ஒழுங்கு, 4. முன்னணிப்படை, 5. பிடரி மயிர், 6. உபாயம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wreath, chaplet, garland, Neck-stripes of parrots, orderliness, van of the army, mane, tactical move, trick
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உருள் பூ தண் தார் புரளும் மார்பினன் – திரு 11 தேர்உருள் போலும் பூவால் செய்யப்பட்ட குளிர்ந்த மாலை அசையும் மார்பினையுடையவனும் மயில் ஓர் அன்ன சாயல் செம் தார் கிளி ஓர் அன்ன கிளவி பணை தோள் – நற் 301/4,5 மயிலோடு ஒத்த தன்மையையுடைய சாயலையும், செந்நிறக் கழுத்துப்பட்டையைக் கொண்ட கிளியின் தன்மையை ஒத்த சொற்களையும், பருத்த தோள்களையும், களிறு நிலை முணைஇய தார் அரும் தகைப்பின் – பதி 64/7 களிறுகள் நிற்பதற்கு வெறுத்த, ஒழுங்காக அமைந்த உயர்ந்த கட்டுக்காவலையுடைய நனம் தலை வேந்தர் தார் அழிந்து அலற – பதி 55/17 அகன்ற இடத்தையுடைய வேந்தரின் முன்னணிப்படையினர் அழிந்து அலறும்படியாக, தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர் அரி மான் வழங்கும் சாரல் – பதி 12/4,5 பிடரி மயிர் அழகுசெய்யும் கழுத்தினையும், நீண்ட கூரிய நகங்களையும் கொண்ட, சிங்கங்கள் நடமாடும் மலைச்சாரலில் மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே ஒரு கால் வரு தார் தாங்கி பின் ஒதுங்கின்றே – புறம் 80/2-4 வலிமையுடைய மல்லனது மிக்க வலிமையைக் கெடுத்து ஒரு கால் மண்டியாகமார்பிலேமடித்துவைத்து, ஒரு கால் அவன் செய்கின்ற உபாயத்தை விலக்கி,முதுகின்கண் வளைத்து
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்