Skip to content

சொல் பொருள் விளக்கம்

(பெ) 1. கால், 2. பூ போன்றவற்றின் அடித்தண்டு, 3. முயற்சி, 4. மரம் போன்றவற்றின் அடிப்பகுதி, 5. படி, 6. மூட்டுவாயின் ஊடுருவச் செறிக்கும் கடையாணி, 7. வால்மீன்,

நெல், கேழ்வரகு முதலியவற்றின் அடி

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

leg, foot, stem, pedicle, effort, foot of a tree, stairs, Pin that holds a tenon in a mortise, comet

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் – திரு 4

தன்னைச்சேர்ந்தவர்களைத் தாங்குகின்ற செருக்குடைய, வலிமையான திருவடிகளையும்

பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி – திரு 22

பசிய தண்டினையுடைய குவளையின் தூய இதழ்களைக் கிள்ளி இட்டு

பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள்
முரசு முழங்கு தானை மூவரும் கூடி – பொரு 53,54

பெருமை பொருந்தின செல்வத்தையும், பெரும் புகழையும், வலிய முயற்சியினையும்,
முரசு முழங்கும் படையினையும் உடைய மூவேந்தர்களும் சேர்ந்து

பார்வை யாத்த பறை தாள் விளவின் – பெரும் 95

பார்வை மான் கட்டிய தேய்ந்த அடிப்பகுதியையுடைய விளாமரத்தின்

குண்டு கண் அகழிய குறும் தாள் ஞாயில் – பதி 71/12

ஆழமான இடத்தையுடைய அகழியையும், குறுகிய படிகளையும் கொண்ட கோட்டை முகப்பினையுடைய

தனி மணி இரட்டும் தாள் உடை கடிகை
நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர்
முனை ஆ தந்து – அகம் 35/3-5

தனித்த ஒரு மணி மாறிமாறி ஒலிக்கும், பொருத்துதல் உள்ள கழுத்துப்பட்டை உடைய –
கூரிய முனை கொண்ட நீண்ட வேலை உடைய சிற்றரண் மழவர்கள் (ஓட்டிச் சென்ற) –
போரிட்டு மீட்ட – பசுக்களைக் கொணர்ந்து,

குள_மீனோடும் தாள் புகையினும் – புறம் 395/35

குளமீன் என்னும் விண்மீனோடு, வால்மீன்களும் புகைந்து தோன்றினும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *