Skip to content

சொல் பொருள்

(பெ) 1. வட்டம், வட்ட வடிவம், 2. உருளை, 3. சக்கராயுதம், 4. அரசாணை என்ற அரச சக்கரம், 5. சூரியன், 6. குயவர் சக்கரம்

சொல் பொருள் விளக்கம்

1. வட்டம், வட்ட வடிவம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

circle, circular form, wheel, the discuss weapon, royal authority, the sun, potter’s wheel

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

செக்கர் அம் புள்ளி திகிரி அலவனொடு யான் – கலி 146/23

சிவந்த அழகிய புள்ளியைக் கொண்டு வட்டமாக இருக்கிற நண்டுகள் திரிகிற இடத்தில் நான்

நெடும் தேர் திகிரி தாய வியன் களத்து – பதி 35/4

நெடிய தேர்களின் சக்கரங்கள் சிதறிப் பரவும் அகன்ற போர்க்களத்தில்,

கண் பொரு திகிரி கமழ் குரல் துழாஅய்
அலங்கல் செல்வன் சேவடி பரவி – பதி 31/8,9

கண்ணைக் கூசவைக்கும் சக்கரப்படையினையும், கமழ்கின்ற துளசிக் கொத்தினைக்கொண்ட
மாலையினையும் உடைய திருமாலின் திருவடிகளைப் புகழ்ந்து வணங்கி,

இலங்கு மணி மிடைந்த பொலம் கல திகிரி
கடல்_அக வரைப்பின் இ பொழில் முழுது ஆண்ட நின் – பதி 14/18,19

ஒளிர்கின்ற மணிகள் செறிந்த பொன்னால் செய்யப்பட்ட அரசாணையாகிய அரச சக்கரத்தைக் கொண்டு
கடல் சூழ்ந்த இந்த நிலவுலகின் இந்தத் தமிழகம் முழுவதையும் ஆண்ட உன்

விசும்பு உடன் விளங்கும் விரை செலல் திகிரி
கடும் கதிர் எறித்த விடுவாய் நிறைய – அகம் 53/2,3

வானம் முழுவதிலும் ஒளிவிட்டு, வேகமாகச் செல்லும் ஞாயிற்றின்
கடுமையான கதிர்கள் எறித்து உண்டாக்கிய வெடிப்புகள் நிறையும்படியாக,

வனை கல திகிரியின் குமிழி சுழலும் – மலை 474

குயவர்)வனையப் பயன்படுத்தும் கருவியின் சக்கரத்தைப் போல நீர்க்குமிழி சுழலும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *