Skip to content

சொல் பொருள்

1. சார்பு, 2. இயல்பு, 3. நற்பண்பு, 4. திறமை, ஆற்றல், சக்தி, 5. வழிமுறை

சொல் பொருள் விளக்கம்

(பெ) 1. சார்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

side, party, nature, moral conduct, skill, efficiency, power, strength, means

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல் – பொரு 230

அறத்தோடு பொருந்திய சார்பினை அறிந்த செங்கோலையும் உடைய

சூழ் கழி இறவின்
கணம்_கொள் குப்பை உணங்கு திறன் நோக்கி – நற் 101/2,3

சூழ்ந்துள்ள கழியில் உள்ள இறாமீனின்
கூட்டமான குவியல் வெயிலில் காயும் தன்மையை ஆராய்ந்து

திறன் இலோர் திருத்திய தீது தீர் கொள்கை
மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ – பரி 1/42,43

நற்பண்பு இல்லாதவர்களைத் திருத்திய தீமை பயக்காத கொள்கையையுடைய
மறப்பண்பும், உன்னை மறுதலிப்போருக்கு அச்சத்தை உண்டாக்கும் அணங்கும் நீ!

மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால்
திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும்
விறல் மிகு வலி – பரி 13/31-33

வீரம் மிக்கு மிகுந்த முழக்கத்தோடு பகைவரைக் கொல்லுகின்ற படைகளுடன்,
தம் ஆற்றலையும் மீறி தன் மேல் படையெடுத்து வரும் பகைவரின் உயிரைப் போக்கும்
வெற்றி மிகுந்த ஆற்றலும்

கார் பெற்ற புலமே போல் கவின் பெறும் அ கவின்
தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/12,13

மழையைப் பெற்ற நிலத்தைப் போல வனப்புறுவாள்; அந்த வனப்பு
இவளை விட்டு அகன்று போகாமல் காப்பதற்கு ஒரு வழிமுறை இருந்தால் அதை உரைப்பாயாக

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *