சொல் பொருள்
(பெ) 1. வலிமை, வீரியம், 2. ஓளி, பிரகாசம்
சொல் பொருள் விளக்கம்
1. வலிமை, வீரியம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
strength, vigour, Lustre, as of precious stones
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் – திரு 149 நெருப்பென்னும்படி நெட்டுயிர்ப்புக்கொள்ளும் அச்சம் தோன்றும் கடிய வலிமையினையும் உடைய திறல் விடு திரு மணி இலங்கு மார்பின் – பதி 46/3 மிகுந்த ஒளியை விடுகின்ற அழகிய மணிமாலை பளிச்சிடும் மார்பினையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்