Skip to content

சொல் பொருள்

(பெ) 1. காந்தள் பூவின் மடல், 2. குழைவான சோறு அல்லது களி போன்றவற்றைக் கிண்டுவதற்குப் பயன்படும் தட்டையான அகப்பை

சொல் பொருள் விளக்கம்

1. காந்தள் பூவின் மடல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 a petal of the flower ‘kanthal’

a flat, narrow, long piece of wood used for stirring rice or ragi pudding

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி – மலை 336

காந்தளின், துடுப்பைப்போன்ற, கமழுகின்ற (வெட்டுவதற்குக்கூரான விளிம்புள்ள)மடலை ஓங்கிப்பாய்ச்சி

துடுப்பொடு சிவணிய களி கொள் வெண் சோறு – புறம் 328/11

துடுப்பால் துழாவப்பட்ட களி அமைப்பைத் தன்னுள்கொண்ட வெண்மையான சோறு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *