Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. வெறு, 2 வருத்து, 3. புலவி கொள்

2. (பெ) 1. வெறுப்பு, 2. துன்பம் 3. புலவி,

சொல் பொருள் விளக்கம்

1. வெறு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

abhor, cause distress, be sulky, variant in love-quarrel, abhorrence, suffering, extended love-quarrel

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

காதல் செய்து அருளாது துறந்தார் மாட்டு ஏது இன்றி
சிறிய துனித்தனை துன்னா செய்து அமர்ந்தனை – கலி 122/3,4

காதலித்துப் பின்னர் இரக்கமில்லாமல் நம்மைப் பிரிந்துசென்றவருக்காகக் காரணமின்றி
முதலில் சிறிதளவு சலித்துக்கொண்டாய்! அவரின் பொருந்தாத செயல்களில் ஆழ்ந்துபோனவளாய்

அகறல் அறியா அணி இழை நல்லார்
இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறு இலர் – பரி 9/23,24

தம் துணைவர் தம்மைவிட்டு அகன்றிருத்தலையே அறியாத அழகிய அணிகலன் அணிந்த மகளிர்
தம் கணவருடன் மனவேறுபாடு கொண்டு அவரை வருத்தும் தவறினைச் செய்யமாட்டார்

ஒண் நுதல் மகளிர் துனித்த கண்ணினும் – பதி 57/13

ஒளிவிடும் நெற்றியைக் கொண்ட மகளிர் புலவியால் கோபங்கொண்டு பார்க்கும் பார்வையைக் காட்டிலும்

துனி இல் காட்சி முனிவர் முன் புக – திரு 137

வெறுப்பு அற்ற காட்சியையுடையரும் ஆகிய முனிவர், முன்னே செல்ல

துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும்
பனி வார் காவின் பல் வண்டு இமிரும் – மலை 485,486

(மக்கள் தம்)துன்பம் தீர்க்கும் விருப்புடன் இன்புற்று அமர்ந்து தங்கியிருக்கும்,
குளுமை பொழியும் சோலைகளில் பல்வித வண்டுகள் ரீங்காரம்செய்யும்

இது மற்று எவனோ தோழி துனி இடை
இன்னர் என்னும் இன்னா கிளவி – குறு 181/1,2

இது என்ன பயனை உடையது, தோழி? புலவிக்காலத்தில்
தலைவர் இப்படிப்பட்டவர் என்னும் இனிமையற்ற சொற்கள்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *