Skip to content

சொல் பொருள்

(பெ) 1. தையல், 2. நெருங்குதல்,

சொல் பொருள் விளக்கம்

1. தையல்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

seam, sewing

being near or close

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த
துன்னல் சிதாஅர் துவர நீக்கி – பொரு 80,81

வேர்வையால் நனைந்து, பிற (நூல்)இழைகள் உள்ளே ஒடுமாறு
தைத்தல் (உடைய)கந்தையை முழுதும் போக்கி

இரை தேர் வெண்_குருகு அல்லது யாவதும்
துன்னல் போகின்றால் பொழிலே – குறு 113/3,4

இரையைத் தேடும் வெள்ளைக் கொக்கு அன்றி, வேறு யாரும்
நெருங்கி வருதல் இல்லை அங்குள்ள சோலைக்கு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *