சொல் பொருள்
(பெ) 1. தையல், 2. நெருங்குதல்,
சொல் பொருள் விளக்கம்
1. தையல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
seam, sewing
being near or close
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த துன்னல் சிதாஅர் துவர நீக்கி – பொரு 80,81 வேர்வையால் நனைந்து, பிற (நூல்)இழைகள் உள்ளே ஒடுமாறு தைத்தல் (உடைய)கந்தையை முழுதும் போக்கி இரை தேர் வெண்_குருகு அல்லது யாவதும் துன்னல் போகின்றால் பொழிலே – குறு 113/3,4 இரையைத் தேடும் வெள்ளைக் கொக்கு அன்றி, வேறு யாரும் நெருங்கி வருதல் இல்லை அங்குள்ள சோலைக்கு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்