Skip to content

சொல் பொருள்

(வி) 1. வெட்டு, துண்டாக்கு, 2. அரத்தால் அறு, 3. வெட்டுப்படு, துண்டிக்கப்படு, 4. அழி, நசுக்கு, 5. விலக்கு,

சொல் பொருள் விளக்கம்

1. வெட்டு, துண்டாக்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

cut off, cut with a file, be cut off, severed, destroy, crush, keep off, obstruct

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கொடும் கால் புன்னை கோடு துமித்து இயற்றிய
பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர் – பெரும் 266,267

வளைந்த காலையுடைய புன்னைகளின் கொம்புகளை வெட்டி(க் கால்களாகக்கொண்டு) உருவாக்கிய,
(படர்ந்த கொடியில்)பச்சைக் காய்கள் தொங்கும், பரப்பப்பட்ட மணலையுடைய பந்தலில்,

வேளா பார்ப்பான் வாள் அரம் துமித்த
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன – அகம் 24/1,2

வேள்வி செய்யாத பார்ப்பான் அறுக்கும் அரத்தால் துண்டாக்கி எடுத்த
வளையல்கள் போக எஞ்சிய சங்கின் தலைப்பகுதியைப் போன்ற

தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை – பதி 35/6

தலைகள் துண்டிக்கப்பட்டதால் குறைந்துபோன முண்டங்கள் எழுந்தாடும் பாழிடமாகிய

தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப
வந்தன்று பெருவிறல் தேரே – நற் 181/11,12

மாலை அணிந்த புரவி, பசுமையான பயிர்களை மிதித்து அழிக்க,
வந்தது தலைவனது தேர்,

தொடீஇய செல்வார் துமித்து எதிர் மண்டும்
கடு வய நாகு போல் நோக்கி தொழு வாயில்
நீங்கி சினவுவாய் – கலி 116/5-7

தொடுவதற்காகக் கிட்டே செல்வாரை விலக்கி உக்கிரமாக எதிர்த்து நிற்கும்
மிகுந்த வலிமை கொண்ட இளம் பசுவினைப் போல என்னப் பார்த்து, தொழுவின் வாசலிலிருந்து
நீங்கிச் சென்று என்னைச் சீறுகின்றாயே!”

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *