சொல் பொருள்
(வி) களைக்கொட்டால் கொத்து, (பெ) 1. பயிர்களின் ஊடேயுள்ள களை.2. களைக்கொட்டு,
சொல் பொருள் விளக்கம்
களைக்கொட்டால் கொத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
strike with a weeding hook, weed, weeding hook
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய பிறங்கு குரல் இறடி காக்கும் – குறு 214/1,2 மரங்களை வெட்டிய குறவன், அந்த நிலத்தைக் களைக்கொட்டால் கொத்தி விதைத்த ஒளிரும் கதிரையுடைய தினையைக் காக்கின்ற கோடு உடை கையர் துளர் எறி வினைஞர் – அகம் 184/13 களைக்கொட்டினையுடைய கையராய், களையினை வெட்டி எறியும் தொழிலாளிகள் தொய்யாது வித்திய துளர் படு துடவை – மலை 122 உழாமல் விதைக்கப்பட்டு, களைக்கொட்டுகளால் கொத்தப்பட்ட தோட்டங்களில்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்