Skip to content

சொல் பொருள்

(வி) களைக்கொட்டால் கொத்து, (பெ) 1. பயிர்களின் ஊடேயுள்ள களை.2. களைக்கொட்டு, 

சொல் பொருள் விளக்கம்

களைக்கொட்டால் கொத்து,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

strike with a weeding hook, weed, weeding hook

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
பிறங்கு குரல் இறடி காக்கும் – குறு 214/1,2

மரங்களை வெட்டிய குறவன், அந்த நிலத்தைக் களைக்கொட்டால் கொத்தி விதைத்த
ஒளிரும் கதிரையுடைய தினையைக் காக்கின்ற

கோடு உடை கையர் துளர் எறி வினைஞர் – அகம் 184/13

களைக்கொட்டினையுடைய கையராய், களையினை வெட்டி எறியும் தொழிலாளிகள்

தொய்யாது வித்திய துளர் படு துடவை – மலை 122

உழாமல் விதைக்கப்பட்டு, களைக்கொட்டுகளால் கொத்தப்பட்ட தோட்டங்களில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *