சொல் பொருள்
1. (வி) மழைபெய், 2. (பெ) 1. சொட்டு, நீர்த்திவலை, 2. மழை
சொல் பொருள் விளக்கம்
1. மழைபெய்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
rain, rain drop, globule of water, rain
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: விண்டு முன்னிய கொண்டல் மா மழை மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப – அகம் 235/5,6 மலையைச் சேர்ந்த கொண்டலாகிய கரிய மேகம் இரவில் தங்குதலுற்றுப் பொங்கி மழையினைப் பெய்ய துவலை தண் துளி பேணார் பகல் இறந்து இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர – – நெடு 34,35 தூரலாக விழும் குளிர்ந்த துளியைப் பொருட்படுத்தாமல், பகற்பொழுதைக் கடந்து, முன்னும் பின்னும் தொங்கவிட்ட துகிலினையுடையராய்(த் தாம்) விரும்பியவாறு திரிந்துவர இன் இசை உருமொடு கனை துளி தலைஇ – அகம் 58/1 இனிய ஓசையுடன் கூடிய இடியுடன் பெரிய மழை பெய்ய,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்