சொல் பொருள்
(வி) 1. துழாவு, கிளறு, அளை, 2. அளாவு, 3. ஒன்றைக் கண்டுபிடிக்க பார்வையை அங்குமிங்கும் செலுத்து
சொல் பொருள் விளக்கம்
1. துழாவு, கிளறு, அளை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
stir well, as with a ladle, mix and stir, cast a searching look into, seek
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூவல் துழந்த தடம் தாள் நாரை – பதி 51/4 பள்ளங்களில் மீனைத் தேடித் துழாவிய பெரிய கால்களையுடைய நாரை கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றி – நற் 41/7,8 பொலிவுடைய அணிகலன்களை அணிந்த பெண்ணே! நெய்யை அளாவவிட்டுச் சமைத்த கொழுத்த தசையிலிருந்து எழும் மணமுள்ள புகை படிந்த நெற்றியில் ஆறு கொள் மருங்கின் மாதிரம் துழவும் கவலை நெஞ்சத்து அவலம் தீர நீ தோன்றினையே – புறம் 174/21-23 நல்ல நெறியினைக் கொண்ட பக்கத்தினையுடைய திசையெங்கும் பார்வையைச் செலுத்தும் கவலையுற்ற மனத்தின்கண் வருத்தம்கெட நீ வந்து தோன்றினாய்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
சங்கத் தமிழ் செய்யுள் பாடலின் வரிகள், சொற்களுக்கு சரியான பதம்/பொருள் கொண்ட சொற்களை துழாவும்போது உங்களுடைய பக்கம் நீங்கள் மேலே குறிப்பிட்ட இறுதிப்பாடலின்படி கவலை தீர்க்கும் வகையில் அமைந்துள்ளது. உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் மிகுந்த நன்றியும் உரித்தாக்குகிறேன். உங்கள் சேவை தொடர எல்லாம் வல்ல இறை அருளை வேண்டுகிறேன்.