சொல் பொருள்
(வி) 1. கூடிநில் 2. குவி, 3. அடர்ந்திரு, 4. நிறை
சொல் பொருள் விளக்கம்
1. கூடிநில்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be united, join, be heaped, be dense, fill up
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கணம் கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇ பிணம் தின் யாக்கை பேய்_மகள் துவன்றவும் கொடும் கால் மாடத்து நெடும் கடை துவன்றி விருந்து உண்டு ஆனா பெரும் சோற்று அட்டில் – பட் 259-262 திரட்சிகொண்ட ஆண்பேய்களுடன் மயிரைத் தாழ்த்து மெல்லநடந்து, பிணந்தின்னும் வடிவையுடைய பேய்மகள் ஒன்றுகூடவும்; உருண்ட(வளைவான) தூண்களையுடைய மாடத்தின் உயரமான தலைவாசலில் குவிந்து, (இடையறாது)விருந்தினர் உண்டு(ம்) குறையாத நிறைந்த சோற்றையுடைய அடுக்களை தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின் மீமிசை நல் யாறு – மலை 51,52 தூய பூக்கள் அடர்ந்துகிடக்கும் கரை(யின் உச்சி)யை மோதுகின்ற (அளவுக்கு)உயர்ச்சியினையுடைய பெரும் பெருக்குள்ள நல்ல ஆறு துவன்றிய கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது – புறம் 137/4,5 நீர் நிறைந்த பள்ளத்தின்கண் விதைத்த வித்து நீரின்மையால் சாவாது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்