Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. ஒலி, 2. ஓங்கி அடி, 3. புகழப்படு, 4. முழக்கமிடு, 5. குழை,

2. (பெ) துவையல்,

சொல் பொருள் விளக்கம்

1. ஒலி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

sound, beat harsh, be praised, roar, become soft, a kind of strong pasty relish

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கறங்கு மணி துவைக்கும் ஏறு உடை பெரு நிரை – மலை 573

(கழுத்தைச் சூழ்ந்த)மணிகள் ஒலிக்கும் காளைகளையுடைய பெரிய பசுக்கூட்டங்களையும்,

வலம் படு முரசம் துவைப்ப வாள் உயர்த்து
——————————
போர்_களத்து ஆடும் கோவே – பதி 56/4-8

வெற்றியையுடைய முரசத்தை ஓங்கி அறைய, வாளினை உயர்த்திக்கொண்டு
—————————————–
போர்க்களத்தில் ஆடுகின்ற அரசன்

துவைத்த தும்பை நனவு_உற்று வினவும் – பதி 88/23

எல்லாராலும் புகழ்ந்து சொல்லப்பட்ட , தும்பைப் போரில், மெய்யான வெற்றியை வேண்டிக்கொண்டு

துவைத்து எழு குருதி நில மிசை பரப்ப – புறம் 370/13

முழங்கிவரும் குருதி வெள்ளம் நிலத்தின் மேல்பரவிச் செல்ல

சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில் – பதி 45/13

சோறு வேறு ஊன் வேறு என்று பிரிக்கமுடியாதபடி ஊன் குழையச் சமைத்த உணவினை

செ ஊன் தோன்றா வெண் துவை முதிரை – பதி 55/7

தன்னில் கலந்த சிவந்த இறைச்சி வெளியில் தெரியாதவாறு அரைத்த வெண்மையான துவரைச் துவையலை

அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில் – புறம் 390/17

அமிழ்து போல் சுவையுடைய ஊன் துவையலோடு கூடிய சோற்றை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *