சொல் பொருள்
தூரம் – எட்டம்
தொலை – மிக எட்டம்
சொல் பொருள் விளக்கம்
“அவனுக்கும் எனக்கும் தூரம் தொலை” என விலக்குவார் உளர். வீட்டுக்கு அயல் வைத்தலைத் தூர மாதல் என்று வழங்கும் வழக்கால் தூரப் பொருள் புலனாம். தொல் என்பதில் இருந்து வரும் தொலை என்பது எட்டத்தினும் எட்டம் என்பதை விளக்கும். தூரம் விலகிப் போதலைக் குறித்தலும் வழக்கே; விலகிப் போதலும் அகன்று போதலும் கருதுக. “தீங்கினர் தம் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே நல்லநெறி” என்பது அறிவுரையாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்