Skip to content
தெங்கு

தெங்கு, தெங்கம் ஆகியவை தென்னை மரத்தைக் குறிக்கிற சொற்கள்.

1. சொல் பொருள்

(பெ) தென்னை

2. சொல் பொருள் விளக்கம்

தேங்காய் பழுப்பதில்லை. ஆனால், முற்றி முதிரும் தன்மையுடையது. அவ்வாறு முற்றிய தேங்காயை நெற்று என்பார்கள். அதனைத் “தெங்கம்பழம்” என்று கூறுவதுமுண்டு. ‘நாய் உருட்டிய தெங்கம்பழம்போல” என்ற பழமொழியும் உண்டு.

தெங்கு + காய் => தெங்(கு) + காய் => தேங் + காய் => தேங்காய்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Coconut-palm, Cocos nucifera

4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

தெங்கு நீண்டு ஈற்று உயிர்மெய் கெடும் காய்வரின் – நன்னூல் 187

தளரா வளர்தெங்கு தானுண்ட நீரைத் தலையாலே தான் தருதலால் (மூதுரை, ஔவையார்)

தெங்கின்
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடு – புறம் 29/15,16

தென்னையின்
இளநீரை உதிர்க்கும் செல்வம் மிக்க நல்ல நாடு

நாய் பெற்ற தெங்கம் பழம் - பழ:151/4

கோள் தெங்கின் குலை வாழை - பொரு 208

வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த - பெரும் 353

புடை சூழ் தெங்கின் மு புடை திரள் காய் - பெரும் 364

கோள் தெங்கின் குலை வாழை - பட் 16

ஒலி தெங்கின் இமிழ் மருதின் - பதி 13/7

வெம் கள் தொலைச்சியும் அமையார் தெங்கின்/இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடு - புறம் 29/15,16

தெங்கு படு வியன் பழம் முனையின் தந்தையர் - புறம் 61/9

எ நிலத்து வித்து இடினும் காஞ்சிரம் காழ் தெங்கு ஆகா - நாலடி:25 3/1

ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல் பழ தெங்கு
செய்த்தலை வீழும் புனல் ஊர அஃதே நன் - பழ:339/2,3

இடையாயார் தெங்கின் அனையர் தலையாயார் - நாலடி:22 6/2

நாரி வாய் என நனி நரல் தெங்கு எழும் காவும் - தேம்பா:12 56/2

கான் நேர் நெருங்கி தெங்கு இலை நேர் கழு நீள் சிவந்த தாடியினான் - தேம்பா:23 7/3

வான் தோய் மடல் தெங்கின் வான் தேறல் தான் தேக்கி - நள:216/2

தெங்கு இளநீர் என தெரிந்த காட்சிய - அயோ:12 37/4

சேண் உய்க்கும் நீலம் சாலம் குருவிந்தம் தெங்கு வெள்ளி - ஆரண்:10 96/3

தேரை வன் தலை தெங்கு இளம் பாளையை - கிட்:15 43/1

செம்மாந்த தெங்கின் இளநீரை ஓர் செம்மல் நோக்கி - பால:17 17/1

பெரும் பகல் வருந்தினர் பிறங்கு முலை தெங்கின்
குரும்பைகள் பொரும் செவிலி மங்கையர் குறங்கில் - அயோ:5 11/1,2

புன்னாக சோலை புனல் தெங்கு சூழ் மாந்தை - முத்தொள்:6/1

தெங்கு உண்ட தேரை படுவழி பட்டேன் யான் - முத்தொள்:27/3

கோள் தெங்கு சூழ் கூடல் கோமானை கூட என - முத்தொள்:55/1

கூடல் இழந்தேன் கொடி அன்னாய் நீள் தெங்கின்
பாளையில் தேன் தொடுக்கும் பாய் புனல் நீர் நாட்டு - முத்தொள்:30/2,3

காய் மாண்ட தெங்கின் பழம் வீழ கமுகின் நெற்றி - சிந்தா:1 31/1

ஊசல் ஆடும் பைம் கமுகு தெங்கின் ஒண் பழம் பரீஇ - சிந்தா:1 68/3

உலக்கையால் உதிர்ந்தன தெங்கின் ஒண் பழம் - சிந்தா:1 92/2

பழம் கொள் தெங்கு இலை என பரந்து பாய் புனல் - சிந்தா:1 40/1

மல்லல் அம் தெங்கு இளநீர் பெய் பண்டியும் - சிந்தா:1 62/1

காய் தெங்கு சூழ்ந்த கரும்பு ஆர் தம் பதிகள் புக்கார் - சிந்தா:11 2348/3

புரிந்த தெங்கு இளநீரும் பூரிப்பார் - சிந்தா:12 2402/4

ழ குலை கமுகும் தெங்கும் வாழையும் பசும்பொன்னாலும் - சிந்தா:1 115/3

கொலையும் உண்டோ கொழு மடல் தெங்கின்
விளை பூம் தேறலில் மெய் தவத்தீரே - மணி: 3/98,99

ஓங்கு இரும் தெங்கின் உயர் மடல் ஏற - மணி:5/126

தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி - மணி:20/57

முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல் - மணி:20/66

தெங்கின் பழனும் தேமா கனியும் - வஞ்சி:25/43

வாழையும் கமுகும் தாழ் குலை தெங்கும்
மாவும் பலாவும் சூழ் அடுத்து ஓங்கிய - மது: 11/83,84

காய் குலை தெங்கும் வாழையும் கமுகும் - மது:13/193

முழு திரள் தெங்கின் விழு குலை நெற்றி - மகத:4/46

குலை அணி கமுகொடு கோள் தெங்கு ஓங்கு - இலாவாண:9/9

வாழை கானமும் வார் குலை தெங்கும்
பலவும் பயினும் இலை உளர் மாவும் - உஞ்ஞை:48/152,153

முதிர் கோள் தெங்கொடு முன்றில் நிவந்து - இலாவாண:15/27

கொழு முதல் தெங்கொடு முழுமுதல் தொலைச்சி - மகத:19/40

பாளை வாய் நெடும் கமுகின் மிடறு ஒடிய குலை தெங்கின் பழங்கள் வீழ - வில்லி:41 236/3

தேனினும் கருப்பம் சாற்றினும் திரண்ட தெங்கு இளநீரினும் இனிதாய் - சீறா:699/2

துடர் அணி குலை தெங்கு இளநீர்கள் தூக்கிடுவார் - சீறா:1105/4

தெங்கம் திரளுடன் எங்கும் கதலிகள் சென்று ஒன்றிய பொழில் அதனூடே - திருப்:297/5

திரளும் மணி தரளம் உயர் தெங்கில் தங்கி புரள எறி திரை மகர சங்க துங்க - திருப்:23/15

மன்றல் கமழ் பூகம் தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ - திருப்:45/7

மன்றல் கமழ் பூகம் தெங்கு திரள் சோலை வண்டு படு வாவி புடை சூழ - திருப்:1334/7

தெங்கின் தாது அளையும் திருவாலி அம்மானே - நாலாயி:1195/4

பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் வண் பழம் விழ வெருவி போய் - நாலாயி:1265/3

மடல் எடுத்த நெடும் தெங்கின் பழங்கள் வீழ மாங்கனிகள் திரட்டு உருட்டாவரு நீர் பொன்னி - நாலாயி:1280/3

கா ஆர் தெங்கின் பழம் வீழ கயல்கள் பாய குருகு இரியும் - நாலாயி:1350/3

இலை தாழ் தெங்கின் மேல் நின்று இளநீர் - நாலாயி:1365/3

தெள் ஊரும் இளம் தெங்கின் தேறல் மாந்தி சேல் உகளும் திருவரங்கம் நம் ஊர் என்ன - நாலாயி:2074/2

புல் இலை தெங்கினூடு கால் உலவும் தண் திருப்புலியூர் - நாலாயி:3765/3

எண் திசையும் பெரும் செந்நெல் இளம் தெங்கு கதலி இலை கொடி ஒண் குலை கமுகோடு இசலி வளம் சொரிய - நாலாயி:1230/3

இளம்படி நல் கமுகு குலை தெங்கு கொடி செந்நெல் ஈன் கரும்பு கண்வளர கால் தடவும் புனலால் - நாலாயி:1234/3

செறி குலை வாழை கமுகு தெங்கு அணி சூழ் திருச்செங்குன்றூர் திருச்சிற்றாறு - நாலாயி:3707/3

காய்த்த நீள் கமுகும் கதலியும் தெங்கும் எங்கும் ஆம் பொழில்களின் நடுவே - நாலாயி:1338/3

பச்சிலை நீள் கமுகும் பலவும் தெங்கும் வாழைகளும் - நாலாயி:3432/2

பாளை விரி மணம் கமழும் பைம் காய் வன் குலை தெங்கின்
தாள் அதிர மிசை முட்டி தடம் கிடங்கின் எழ பாய்ந்த - 4.மும்மை:4 4/1,2

பாங்கு நீள் குலை தெங்கு பைம் கதலி வண் பலவு - 4.மும்மை:5 27/3

சூதம் நெருங்கு குலை தெங்கு பலவும் பூகம் சூழ்பு உடைத்தாய் - 5.திருநின்ற:3 1/1

செய் தரு சாலி கரும்பு தெங்கு பைம் பூகத்திடை போய் - 6.வம்பறா:1 296/2

மருங்கு மிடை தடம் சாலி மாடு செறி குல தெங்கு
நெருங்கி வளர் கமுகு உடுத்த நிறை மருத வழி சென்றார் - 6.வம்பறா:1 625/3,4

கமுகு ஊறு தெங்கு கரும்பொடு வாழை - திருமந்:248/3

தெங்கம்பழம் கமுகின் குலை சாடி கதலி செற்று - திருக்கோ:100/1

தூண்டில் எடுத்த வரால் தெங்கொடு எற்ற பழம் விழுந்து - திருக்கோ:249/3

தெங்கு திரள் சோலை தென்னன் பெருந்துறையான் - திருவா:8 1/4

தெங்கு உலவு சோலை திரு உத்தரகோசமங்கை - திருவா:16 9/1

தெங்கு சோலைகள் சூழ் பெருந்துறை மேய சேவகன் நாயகன் - திருவா:42 3/2

தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணல் படப்பை - தேவா-சுந்:721/2

தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம் மேயவனை - தேவா-சம்:514/1

ஈளை படுகில் இலை ஆர் தெங்கின் குலை ஆர் வாழையின் - தேவா-சம்:727/3

இன் சாயல் இளம் தெங்கின் பழம் வீழ இள மேதி இரிந்து அங்கு ஓடி - தேவா-சம்:1401/3

கொக்கு இனிய கொழும் வருக்கை கதலி கமுகு உயர் தெங்கின் குவை கொள் சோலை - தேவா-சம்:1407/3

மடல் ஆர்ந்த தெங்கின் மயிலையார் மாசி - தேவா-சம்:1976/1

தெங்கின் ஊடு போகி வாழை கொத்து இறுத்து மாவின் மேல் - தேவா-சம்:2567/3

இஞ்சிக்கே கதலி கனி விழ கமுகின் குலையொடும் பழம் விழ தெங்கின்
மிஞ்சுக்கே மஞ்சு சேர் பொழில் வீழிமிழலையான் என வினை கெடுமே - தேவா-சம்:4088/3,4

படலை சேர் அலங்கல் மார்பர் பழனம் சேர் கழனி தெங்கின்
மடலை நீர் கிழிய ஓடி அதனிடை மணிகள் சிந்தும் - தேவா-அப்:281/2,3

தெங்கு உயர் சோலை சேர் ஆலை சாலி திளைக்கும் விளை வயல் சேரும் பொய்கை - தேவா-சம்:78/3

குலை ஆர் தெங்கு குளிர் கொள் வாழை அழகு ஆர் குட மூக்கில் - தேவா-சம்:778/2

தேன் நெய் பால் தயிர் தெங்கு இளநீர் கரும்பின் தெளி - தேவா-சம்:1528/3

தெங்கு துங்க பொழில் செல்வம் மல்கும் திகழ் சிக்கலுள் - தேவா-சம்:1551/2

தெங்கு அணவு தேன் மலி திரு புகலி ஆமே - தேவா-சம்:1780/4

பரு மராமொடு தெங்கு பைம் கதலி பரும் கனி உண்ண மந்திகள் - தேவா-சம்:2001/1

தெங்கு பைம் கமுகம் புடை சூழ்ந்த திரு களருள் - தேவா-சம்:2019/2

தெங்கு உலாவு சோலை நீடு தேன் உலாவு செண்பகம் - தேவா-சம்:2565/3

குலையின் ஆர் தெங்கு சூழ் கொள்ளம்பூதூர் - தேவா-சம்:2858/1

கொடு மடல் தங்கு தெங்கு பழம் வீழ் குடமூக்கு இடமா - தேவா-சம்:3434/3

தேம் கொள் பூம் கமுகு தெங்கு இளம் கொடி மா செண்பகம் வண் பலா இலுப்பை - தேவா-சம்:4082/3

ஓங்கு தெங்கு இலை ஆர் கமுகு இள வாழை மாவொடு மாதுளம் பல - தேவா-அப்:201/3

தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும் படப்பை எல்லாம் - தேவா-அப்:535/2

தெங்கு சேர் கடம்பூர் கரக்கோயிலே - தேவா-அப்:1269/4

தேன் அஞ்சு ஆடிய தெங்கு இளநீரொடும் - தேவா-அப்:1515/3

குலை தெங்கு அம் சோலை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே - தேவா-அப்:2810/4

குலை மலிந்த கோள் தெங்கு மட்டு ஒழுகும் பூம் சோலை கொகுடிக்கோயில் - தேவா-சுந்:309/2

கருக்கு வாய் பெண்ணையொடு தெங்கு மலி சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே - தேவா-சுந்:408/4

பாளை தெங்கு பழம் விழ மண்டி செம் கண் மேதிகள் சேடு எறிந்து எங்கும் - தேவா-சுந்:589/3

கரவு இல் அருவி கமுகு உண்ண தெங்கு அம் குலை கீழ் கருப்பாலை - தேவா-சுந்:781/3

குழகா வாழை குலை தெங்கு கொணர்ந்து கரை மேல் எறியவே - தேவா-சுந்:784/3

தெங்கு அம் பொழில் சூழ்ந்த திரு கேதீச்சுரத்தானே - தேவா-சுந்:816/4

தெங்கு அணை பூம் பொழில் சூழ் திரு நாகேச்சரத்து அரனை - தேவா-சுந்:1016/2

நிரை ஆர் கமுகும் நெடும் தாள் தெங்கும் குறும் தாள் பலவும் விரவி குளிரும் - தேவா-சுந்:427/3

தெங்கொடு பனை பழம் படும் இடம் தேவர்கள் - தேவா-சுந்:732/2
தேங்காய்
தேங்காய்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *