சொல் பொருள்
(பெ) ஒருவிதத் தலையணிகலன்,
சொல் பொருள் விளக்கம்
ஒருவிதத் தலையணிகலன்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Women’s head-ornament
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி தெய்வஉத்தியொடு வலம்புரி வயின் வைத்து – திரு 22,23 பசிய தண்டினையுடைய குவளையின் தூய இதழ்களைக் கிள்ளி இட்டு, தெய்வவுத்தி, வலம்புரி ஆகிய தலைக்கோலங்களை அதனதன் இடத்தில் வைத்து – தெய்வவுத்தி – சீதேவி என்னும் தலைக்கோலம் என்பார் நச். தம் உரையில். தெய்வவுத்தியொடு செழுநீர் வலம்புரி தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கணி மை ஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து -சிலப்.6.கடலாடு.:106-108 என்ற இளங்கோவடிகள் கூற்றானும் அறிக – பொ.வே.சோ.உரை விளக்கம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்