Skip to content

சொல் பொருள்

(பெ) ஒருவிதத் தலையணிகலன்,

சொல் பொருள் விளக்கம்

ஒருவிதத் தலையணிகலன்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Women’s head-ornament

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பைம் தாள் குவளை தூ இதழ் கிள்ளி
தெய்வஉத்தியொடு வலம்புரி வயின் வைத்து – திரு 22,23

பசிய தண்டினையுடைய குவளையின் தூய இதழ்களைக் கிள்ளி இட்டு,
தெய்வவுத்தி, வலம்புரி ஆகிய தலைக்கோலங்களை அதனதன் இடத்தில் வைத்து
– தெய்வவுத்தி – சீதேவி என்னும் தலைக்கோலம் என்பார் நச். தம் உரையில்.

தெய்வவுத்தியொடு செழுநீர் வலம்புரி
தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்கணி
மை ஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து -சிலப்.6.கடலாடு.:106-108

என்ற இளங்கோவடிகள் கூற்றானும் அறிக – பொ.வே.சோ.உரை விளக்கம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *