Skip to content

சொல் பொருள்

(வி) மனம் கலங்கு, மருட்சியடை

சொல் பொருள் விளக்கம்

மனம் கலங்கு, மருட்சியடை

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be perplexed, be unnerved

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பேர் அஞர் கண்ணள் பெரும் காடு நோக்கி
தெருமரும் அம்ம தானே – புறம் 247/6,7

பெரிய துன்பம் மேவிய கண்ணை உடையவளாய் புறங்காட்டைப் பார்த்து
தான் மனம்கலங்கும்

வளை முன்கை பற்றி நலிய தெருமந்திட்டு
அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா – கலி 51/10,11

வளையணிந்த முன்கையைப் பற்றி அழுத்த, மருண்டுபோய்
அன்னையே! இவன் செய்வதைப் பாரேன்” என்று கூவிவிட,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *