சொல் பொருள்
(வி) 1. தெளிவாக ஒலி, 2. ஒளிபெறு, 2. (பெ) தெளிவான ஓசை,
சொல் பொருள் விளக்கம்
1. தெளிவாக ஒலி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sound clearly, shine, sparkle, clear sound
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை – அகம் 257/10 நுண்ணிய திரண்ட ஒளி பொருந்திய வளை ஒலிக்கும் முன்கை ஒண்_தொடியார் வண்ணம் தெளிர முகமும் வளர் முலை கண்ணும் கழிய சிவந்தன – பரி 10/94-96 ஒளிரும் வளையலையுடைய அம் மகளிர், நீர்விளையாட்டினால் தம் நிறம் மேலும் ஒளிபெற்று விளங்க, அவரின் முகமும், முலைகளின் கண்களும் மிகவும் சிவந்தன; தெண் கடல் அடைகரை தெளிர் மணி ஒலிப்ப – குறு 212/2 தெளிந்த நீரையுடைய கடலின் அடைந்தகரையில் தெளிவான ஓசையுள்ள மணிகள் ஒலிக்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்