Skip to content

சொல் பொருள்

(வி) 1. ஆறுதல் கூறு,  2. தெளிவி,  3. அறி, தெரிந்துகொள், புரிந்துகொள்,  4. சூளுரை,

சொல் பொருள் விளக்கம்

ஆறுதல் கூறு, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

console, make clear, know, understand, swear, take an oath

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும் – முல் 82

நீண்ட பிரிவினை நினைந்து, அது நன்மைக்கே என்று தனக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டும்,
கழலுகின்ற வளையை(க் கழலாமற்)செறித்தும்,

என்னும் உள்ளினள்-கொல்லோ தன்னை
நெஞ்சு உண தேற்றிய வஞ்சின காளையொடு
அழுங்கல் மூதூர் அலர் எழ
செழும் பல் குன்றம் இறந்த என் மகளே – ஐங் 371-374

என்னையும் நினைத்துப்பார்த்தாளோ? தன்னைத்
தன் மனம் ஏற்றுக்கொள்ளும்படி தெளிவித்த உறுதிமொழிகளைக் கூறிய இளைஞனோடு
ஆரவாரப்பேச்சுள்ள இந்த பழமையான ஊரில் பழிச்சொற்கள் உண்டாகுமாறு
செழித்த பலவான குன்றுகளைக் கடந்து சென்ற என் மகள்தான்

அளிய தாமே செ வாய் பைம் கிளி
குன்ற குறவர் கொய் தினை பைம் கால்
இருவி நீள் புனம் கண்டும்
பிரிதல் தேற்றா பேர் அன்பினவே – ஐங் 281-284

இரங்கத்தக்கனவாம், சிவந்த வாயினையுடைய பசிய கிளிகள்!
குன்றத்தின் குறவர்கள் கொய்துவிட்ட தினைப் பயிரின் பசிய தண்டுகளையுடைய
கதிரறுத்த வெறும் தட்டைகள் நீண்டிருக்கும் புனத்தைக் கண்டபின்னரும்
அப் புனத்தைவிட்டுப் பிரிந்துபோதலைத் தெரிந்துகொள்ளாத அளவுக்குப் பெரிய அன்பினை உடையவை.

உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்
புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்_வயின்
அனையேன் ஆயின் அணங்குக என் என
மனையோள் தேற்றும் மகிழ்நன் ஆயின் – அகம் 166/7-10

உயர்ந்த பலிகளைப் பெறும் அச்சம்தரும் தெய்வம்
அணிந்த கரிய கூந்தலையுடையவளான நீ சந்தேகப்படுபவளுடன்
நான் உறவுகோண்டவனாயின் என்னை வருத்துக என்று
தன் மனைவியை அவள் கணவன் சூளுரைத்துத் தெளியவைப்பானாயின்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *