Skip to content

சொல் பொருள்

(வி) 1. கை படு, தீண்டு,  2. தோண்டு,  3. செறித்துக்கட்டு, அணி,  4. இசைக்கருவி வாசி, 5. செலுத்து, 6. ஒவ்வொன்றாய்ச்சேர்த்துக்கட்டு, 7. ஒவ்வொன்றாகச் சேர்த்துச்செய், 8. கயிற்றினால் கட்டு,  9. வில்லில் அம்பினைப் பூட்டு, 10. தன்வசப்படுத்து,  11. தொடர்புற்று விழு,  12. வளை, சூழ், 13. பற்றிக்கொள்,

சொல் பொருள் விளக்கம்

1. கை படு, தீண்டு, 

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

touch, dig, scoop out, wear tightly, play musical instruments, discharge, fasten, string together, block together, build up, tie with a rope, fix or set as the arrow in a bow, bind with love or liberality, flow continuously, surround, hem in, grasp

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஊர் உண் கேணி உண்துறை தொக்க
பாசி அற்றே பசலை காதலர்
தொடு_உழி தொடு_உழி நீங்கி
விடு_உழி விடு_உழி பரத்தலானே – குறு 399

ஊரினர் உண்ணும் சிறிய குளத்தில் உண்ணும் துறையில் கூடிய
பாசியைப் போன்றது பசலைநோய்; காதலர்
கை படும்பொழுதெல்லாம் நீங்கி,
அவர் விடும்பொழுதெல்லாம் மீண்டும் பரந்துவிடுகிறது.

கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின் – மலை 292

ஆண் கருங்குரங்கு தோண்டின பெரிய பலாப்பழம் காயம் மிகுந்து ஊற்றெடுப்பதால்

இடு புணர் வளையொடு தொடு தோள் வளையர் – பரி 12/23

ஆணியிட்டுச் சேர்க்கப்படும் வளையல்களோடு, செறிக்கப்பட்ட தோள்வளையினை உடையவரும்

இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடு-மின் – மலை 277

மேற்செல்லுதலைத் தவிர்த்து உமது இசைக்கருவிகளை இசைப்பீராக

தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என – நற் 206/5

தட்டை எனும் கருவியை அடித்து ஒலித்து, கவண்கல்லும் வீசுக என்று

குளவியொடு
வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன் – திரு 191,192

காட்டு மல்லிகையுடன்
வெண்டாளியையும் கட்டின தலைமாலையை உடைய

விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த
தண் கமழ் அலர் இறால் சிதைய நன் பல – திரு 299,300

விண்ணைத் தொடுகின்ற நெடிய மலையிடத்தே ஞாயிற்றைப் போல் (தேனீக்கள்)செய்த
தண்ணியவாய் மணக்கின்ற விரிந்த தேன்கூடு கெட

உதள
நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில் – பெரும் 151,152

ஆட்டுக்கிடாயின்
நெடிய கயிறுகள் கட்டப்பட்ட குறிய முளைகளையும் உடைய முற்றத்தில்

தொடுத்த வாளியர் துணை புணர் கானவர் – மலை 17

தொடுக்கப்பட்ட அம்பினை உடையவராய்த் தம் துணைவியரோடே சேர்ந்திருக்கும் கானவர்,

பாடுநர் தொடுத்த கைவண் கோமான்
பரி உடை நல் தேர் பெரியன் – அகம் 100/11,12

பாடிவருவோரை தன்வசப்படுத்தி வளைத்துக்கொள்ளும் கைவண்மை வாய்ந்த கோமானாகிய
குதிரைகள் பூண்ட சிறந்த தேரினையுடைய பெரியன் என்பானது

மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம் – அகம் 126/3

மலை உச்சியினின்று தொடர்புற்று வீழ்ந்த மிக்குச் செல்லுதலையுடைய வெள்ளத்தால்,

தொடுத்தும் கொள்ளாது அமையலென் – புறம் 164/10

வளைத்தாயினும் பரிசில்கொள்ளாது விடேன்

தொடுத்தேன் மகிழ்ந செல்லல் – அகம் 396/1

நின்னை யான் பற்றிக்கொண்டே தலைவனே! செல்லாதே!

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *