சொல் பொருள்
(பெ) 1. தொடர்ச்சி, (பூச்)சரம்,
சொல் பொருள் விளக்கம்
தொடர்ச்சி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
continuation
string (of flowers)
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆய் தினை அரிசி அவையல் அன்ன கேள்வி போகிய நீள் விசி தொடையல் மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன – பொரு 17-19 ஆய்ந்தெடுத்த தினை அரிசியின் குற்றலைப் போன்ற (யாழ் நரம்பின் குற்றமாகிய)வேய்வை போக விரலால் அசைக்கும் நரம்பின் இசை முற்றுப்பெறுமாறு இழுத்துக்கட்டிய விசித்தலையுடைய தொடர்ச்சியையும் தண் நறும் தொடையல் வெண் போழ் கண்ணி – குறி 115 தண்ணிய நறிய மலர்ச்சரங்களையும், வெண்மையான தாழைமடல் தலைமாலையினையும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்