Skip to content

சொல் பொருள்

(பெ) 1. தொடர்ச்சி, (பூச்)சரம், 

சொல் பொருள் விளக்கம்

தொடர்ச்சி,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

continuation

string (of flowers)

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

ஆய் தினை அரிசி அவையல் அன்ன
கேள்வி போகிய நீள் விசி தொடையல்
மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன – பொரு 17-19

ஆய்ந்தெடுத்த தினை அரிசியின் குற்றலைப் போன்ற
(யாழ் நரம்பின் குற்றமாகிய)வேய்வை போக விரலால் அசைக்கும் நரம்பின்
இசை முற்றுப்பெறுமாறு இழுத்துக்கட்டிய விசித்தலையுடைய தொடர்ச்சியையும்

தண் நறும் தொடையல் வெண் போழ் கண்ணி – குறி 115

தண்ணிய நறிய மலர்ச்சரங்களையும், வெண்மையான தாழைமடல் தலைமாலையினையும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *